தஞ்சை மாவட்ட இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற 'திராவிடம் வெல்லும்' தெருமுனை கூட்டம்

தஞ்சை, மார்ச் 13- தஞ்சை மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் தெரு முனைக் கூட்டம் 4.3.2021 அன்று மாலை 6.00 மணிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அருகில் சுந்தரம் பெயிண்ட்ஸ் பகுதியில்  நடை பெற்றது. அனைவரையும் வர வேற்று குந்தவை நாச்சியார் மாணவர் கழகத்  தலைவர் விடுதலைஅரசி உரையாற்றி னார்.

தஞ்சை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் .விஜயக்குமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க உரையாற்றினார்.

திராவிடம் வெல்லும் தலைப்பில் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி இன்றைய சூழ்நிலையில் பாசிச பாஜக அரசு மக்களை தொடர்ந்து கல்வியிலும் பொருளாதாரத்திலும் வஞ்சிக்கும் நிலையும் அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கையின் மூல மாக போராட்டங்கள் மூல மாக மக்களிடம் திராவிடர் கழகம் எடுத்து செல்கின்ற பணிகளையும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தொடர்ந்து அடுத்த தலை முறைக்கு யார் வந்தால் அனைத்து சமவாய்ப்பு சம உரிமையும் கிடைக்கும் என விரிவாக எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து திராவிட முன் னேற்றக் கழகத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என எழுச்சி முழக்கமிட்டார்.

கூட்டத்தில் பொதுச்செய லாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், மாநில கிராமப்புற பிரச் சாரக் குழு அமைப்பாளர் 'அதிரடி' .அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோபு பழனிவேல், மாநில கலைத் துறைச் செயலாளர் .சித் தார்த்தன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் .சந் துரு, மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன், தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங் கம், மேற்கு ஒன்றியச் செய லாளர் அரங்கராஜன், உரத்த நாடு மேற்குப் பகுதி செயலா ளர் புலவர் மோகன்தாஸ், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் பாலு, பெரியார் வீர விளையாட்டுக் கழக மாவட்ட செயலாளர் சிகாமணி, மாவட்ட . அமைப்பாளர் பாவலர் பொன்னரசு, மருத் துவக் கல்லூரி பகுதிச் செய லாளர் கோவிந்தராஜ், பிள் ளையார்பட்டி பகுதி செய லாளர் முருகேசன் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கபிலன், மாவட்ட மாணவர் கழகத் அமைப்பாளர் மான வீரன், மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் சிந் தனை அரசு, மகளிர் அணி பொறுப்பாளர் பாக்கியம், மாணவர் கழகப் பொறுப் பாளர்கள் இராமு, முல்லை, அறிவுமணி, மருத்துவ கல் லூரி பகுதி பொறுப்பாளர் போட்டோ மூர்த்தி, மருத்து வக் கல்லூரி பகுதி இளைஞ ரணி பொறுப்பாளர் தேவா, பெரியார் பிஞ்சு சின்னையன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் நாத்திகன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மாயன் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் சிகாமணி அனை வருக்கும் நன்றி கூறினார்.

Comments