தளபதியை ஆட்சிக் கோட்டைக்குள் அழைத்துச் செல்லத்தான் இளம் தலைவர் ராகுல்காந்தி இங்கு வந்துள்ளார் - வெற்றி நமதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெற்றி முழக்கம்!

சேலம், மார்ச் 29  தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களை ஆட்சிக் கோட்டைக்கு அழைத்துச் செல்லத்தான் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி இங்கு வந்துள்ளார்; அவரை வரவேற்கிறோம் - வெற்றி நமதே என்று வெற்றி முழக்கமிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்!

சேலத்தில் நேற்று (28.3.2021) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற  மாபெரும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

தந்தை பெரியாரின் துணிவும், அறிஞர் அண்ணா அவர்களுடைய கனிவும், கலைஞர் அவர்களுடைய செறிவும் அனுபவமாகக் கொண்டு இங்கே நம்மிடையே மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டை மீட்டெடுக்கப் போகின்ற எங்கள் அரும்தளபதியும், இந்த விழாவினுடைய - பிரச்சாரக் கூட்டத்தினுடைய தலைவருமான தளபதி அவர்களே,

அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு ஒரு கொள்கைப்பூர்வமாக இருக்கக்கூடிய வாய்ப்புள்ள காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய சிறந்த தலைவராக, இளம் தலைவராக இருக்கக்கூடிய பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே,

Our most valued committed ideological co-fighter Rahul Gandhi அவர்களே,

மற்றும் மேடையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த பெருமக்களே,

கடல்போல் இங்கே குழுமியிருக்கக் கூடிய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே,

உலகம் முழுவதும் இருந்து தொலைக்காட்சியின் வாயிலாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற, கேட்டுக் கொண்டிருக்கின்ற பெருமக்களே,

இந்த நாள், அதிகமாகப் பேசவேண்டிய அவசியமில்லாத நாள் - மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்.

தளபதி, உழைப்பின் உருவமாக, தேனீயாக, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

அமித்ஷாவுக்கும், மோடிக்கும் ஆளுங்கட்சியினர் அடிபணிகிறீர்களே' - ராகுல்

ராகுல் காந்தி அவர்கள் இன்று காலையில்கூட சென்னையில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை மிக அற்புதமான உரையாகும். தமிழன் எந்தக் காலத்திலும் - மூவாயிரம் ஆண்டுகாலத்தில் அடிபணிந்ததே கிடையாது - அமித்ஷாவுக்கும், மோடிக்கும் ஆளுங்கட்சியினர் அடிபணி கிறீர்களே என்று மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கேட்டார்.

சுயமரியாதைப் பூமியில், இந்த சுயமரியாதை வீரருக்கு இருக்கின்ற உணர்ச்சி, இங்கே இருக்கக்கூடியவர்கள் வருமானத்திற்காக,

தன்மானத் தையும், இனமானத்தையும் அடகு வைத்துவிட்டு இருக்கிறீர்களே, அதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கிறது?

வரலாறு திரும்பவிருக்கிறது - வரலாறு,

புதிய வரலாற்றைப் படைக்கவிருக்கிறது

எனவே, நண்பர்களே! ஒன்றை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு, தளபதிதான் முதலமைச்சர் - கோட்டைக்குள் சென்று - இந்த நாட்டையே மீட்கக்கூடிய அற்புதமான நிகழ்ச்சி நடைபெறும். அவர் தமிழ்நாட்டை மட்டும் மீட்கப் போவதில்லை; எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - அண்ணா பெயரில் இருக்கக்கூடிய அந்தக் கட்சி இருக்கிறதே - இப்பொழுது அது மோடியிடம், அமித்ஷாவிடம், ஆர்.எஸ்.எஸிடம்,  பா...விடம் அடகு வைக்கப்பட்டு இருக்கிறது; வரு மானத்திற்காக, அடமானமாகப் போனவர்களை - அந்த அடமானத்திலிருந்து மீட்கக்கூடிய பொறுப்பும் நம்முடைய தளபதி அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான், வரலாறு திரும்பவிருக்கிறது - வரலாறு, புதிய வரலாற்றைப் படைக்கவிருக்கிறது.

இந்தக் கூட்டம், தேர்தல் பரப்புரைக் கூட்டமல்ல - தளபதி அவர்களை அழைத்துக்கொண்டு போய், கோட்டைக்குள் அமர வைப்பதற்கு, நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கைபிடித்து, உள்ளே அழைத்துச் செல்லக்கூடிய அச்சார நாள்!

கரோனா தொற்றைவிட மிகவும் கொடூரமானதுஆர்.எஸ்.எஸ்., பா...!

இது கரோனா தொற்றுக் காலம் - எல்லோரும் முகக்கவசம் அணிந் திருக்கின்றோம். முகக்கவசம் முக்கியம், முக்கியம் என்று சொல்லுகிறோம். ஆம், முகக்கவசம் முக்கியம் - சோப்புப் போட்டு கைகளைக் கழுவுவதும் முக்கியம் - கிருமி நாசினி போடுவதும் முக்கியம் - அதைவிட முக்கியம், தடுப்பூசி போட்டுக் கொள்வது.

கரோனா தொற்றைவிட மிகவும் கொடூரமானது - ஆர்.எஸ்.எஸ்., பா..., மதவெறிக் கும்பல், ஜாதி வெறிக் கும்பல், பண வெறிக் கும்பல், பதவி வெறிக் கும்பல், அதிகார வெறிக் கும்பல் என்கிற கிருமிகள் நம்முடைய பண்பாட்டை அழிக்க, நம்முடைய பிள்ளைகளுடைய கல்வியை நாசம் செய்ய, குலதர்மத்திற்கும் - சமதர்மத்திற்கும் போராட்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற நேரத்தில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால்,

எப்படி கரோனா தொற்றுக் கிருமிகள் கண்ணுக்குத் தெரியாமல் வந்து உள்ளே நுழைகிறதோ, அதைத் தடுப்பதற்காகத்  தடுப்பூசி போடப்படுகிறதோ, அந்தத் தடுப்பூசிதான் தளபதி ஸ்டாலின் - அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியாகும்.

அந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், முகக்கவசம் மிகவும் முக்கியமாகும். அந்த முகக்கவசம்தான் நம்முடைய வேட்பாளர்கள்.

எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், சோப்புப் போட்டு கைகழுவுவது மிகவும் முக்கியம்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம், அந்த சோப்பு போன்று மிக முக்கியமானவர்கள்.

கிருமிகளை அழிப்பதுதான் எங்கள் வேலை

திராவிடர் கழகம் போன்று,  தேர்தலில் நிற்காத எங்களைப் போன்ற காவலர்களுக்கு என்ன வேலை என்றால்,  கரோனா தொற்றுக் கிருமிகளை அழிக்கக்கூடிய சானிடைசரைப் போன்றவர்கள். கிருமிகளை அழிப்பதுதான் எங்கள் வேலை.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், இந்த நகரத்தில், அண்ணா அவர்களின் மூலமாக, திராவிடர் கழகமாக மாற்றியதை சகோதரர் வைகோ அவர்கள் இங்கே சொன்னார்கள்.  ‘‘சேலம், செயலாற்றும் காலம்'' என்று அண்ணா அவர்கள், அந்தக் காலத்தில் சொன்னார்கள். அப்படிப்பட்ட வரலாறு படைத்தது இந்த சேலம்.

அழிவழக்குப் போட்ட அமைச்சருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!

மிகப்பெரிய அளவிற்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். இதை நாங்கள் சொல்லவில்லை, நீதிமன்றமே சொல்லியிருக்கிறது - இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு ஊழல் அமைச்சரைப்பற்றி பேசுகின்ற நேரத்தில், இதைப்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று வழக்குப் போட்டார்.

ஏன் பேசக்கூடாது? மக்களுக்கு ஏன் அறிவுறுத்தக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்து, அழிவழக்கைப் போட்டதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை அந்த அமைச்சருக்கு விதித்தார்கள்.

மீண்டும் தமிழ்நாடு மீட்கப்படும்மீண்டும் விடிவு வரும்!

இந்த அணியினுடைய நேர்மை, நியாயம், தேவையான வாதங்களைப்பற்றி நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்!

எனவேதான்,

திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!

திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்!!

மீண்டும் தமிழ்நாடு மீட்கப்படும் -

மீண்டும் விடிவு வரும்!

அருமைச் சகோதரர் ராகுல்காந்தி அவர்களே, நீங்கள் இன்றைக்குச் சொன்னீர்கள், சுயமரியாதை உணர்வு பெறுங்கள் என்று.

அந்த சுயமரியாதையை, இங்கே ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மறந்துவிட்ட நேரத்தில்,

Our most valued committed ideological co-fighter Rahul Gandhi அவர்கள் 

......

you have come to remind them. you have come here to inject the self-respect. who were  already morgaged the entire Tamilnadu. 

This is the right time. we all there, our thalapathy Stalin will take care of Tamilnadu. He is like a light house. The light house will always be spread throughout India and you will be helpful and we will form an ideological front, which will bound to create a new history! 

Thank you

வெற்றி நமதே!

நன்றி வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தி.மு.. தலைவர், இளந்தலைவர் ஆகியோருக்கு தமிழர் தலைவர்  வழங்கிய நூல்கள்

1. பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள்

2. முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்

3. இந்தியக் கூட்டாட்சி முறையை தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் - 2020

4. திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?

5. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வாழ வைக்கவா? வஞ்சிக்கவா?

6. தி.மு.. கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்!

7. தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் போர்

8. திராவிடம் வெல்லும் ஏன்? எப்படி?

ஆகிய நூல்கள் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1. Thoughts of Periyar

2. Social Justice

3. Agriculture acts of 2020

4. A man ahead of his time

ஆகிய நூல்கள் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image