கரோனா பாதிப்பு

மராட்டியம் - நாக்பூரில் ஒரு வார கால ஊரடங்கு

நாக்பூர்,மார்ச்15-மராட்டி யத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனை முன்னிட்டு முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே தடுப்பு நடவடிக்கைகளை தீவி ரப்படுத்தி வருகிறார்.  கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாக மும் மக்களை வலியுறுத்தி வருகிறது.  இதேபோன்று, தடுப் பூசி போடும் பணிகளும் நடந்து வருகின்றன.  மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத் துவது என அரசு முடிவு செய் தது.  இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு அம லுக்கு வந்தது.

இதே போன்று, நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  ஊரடங்கில் அத்தியாவசியச் சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் பூத் உள்ளிட்டவை திறந்திருக்கும்.  மருந்து பொருட் கள்  சேவைக்கு அனுமதி அளிக் கப்பட்டு உள்ளது.

நாக்பூரில் ஊரடங்கு உத் தரவு அமலான நிலையில், அனைத்து கடைகளும் அடைக் கப்பட்டு இருந்தன.  வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால் கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி உத்தரவிடப்பட்டன.

Comments