யார் காரணம்?

ஆனந்த மார்க்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி ஸ்தாபனங்கள் தமிழ்நாட்டிலே தலையெடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? எங்கள் இயக்கத்தின் தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால்தான் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

பெண்ணடிமை ஒழிப்பு, கலப்புத் திருமணம், விதவைகளுக்கு மறுவாழ்வு, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை, கர்ப்பத் தடை, கல்வி உரிமை இவற்றிற்காகவெல்லாம் இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குரல் கொடுத்துக் கொண்டு வந்ததோடல்லாமல், அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகச் சொல்லொணாத் துயரங்களையும், கஷ்ட நஷ்டங்களையும் இன்றுவரை ஏற்றுக் கொண்டு வருகிற இயக்கத்தினர் எங்களைத் தவிர வேறு யார்? தந்தை பெரியார் அவர்களைத் தவிர இதற்கு உரிமை கொண்டாட எவரேனும் இருக்கிறார்களா?

- அன்னை மணியம்மையார் விடுதலை 24.4.1976

Comments