அமெரிக்க ராணுவ அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வருகை

வாசிங்டன், மார்ச் 12 அமெரிக்காவின் புதிய ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அடுத்த வாரம் இந்தியா வருவார் என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன்

தெரிவித்துள்ளது.

ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு லாயிட் ஆஸ்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

லாயிட் ஆஸ்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் போது 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்து பன்னாட்டு பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதோடு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக் காவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. லாயிட் ஆஸ்டின் எந்த தேதியில் இந்தியா வருகிறார் என்பதை பென்டகன் அறிவிக்கவில்லை. எனினும் அவர் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தனது பயணத்தின் இறுதியாக இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்தியாவில் லாயிட் ஆஸ்டின், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தேசிய பாதுகாப்பு தலைவர்களை சந்தித்து அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டாட்சியை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம் படுத்துவது குறித்து விவாதிப்பார் என்று பென்டகன் குறிப் பிட்டுள்ளது.

தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வில் சீன அரசு தலையிடக் கூடாது - அமெரிக்கா

வாசிங்டன்,  மார்ச் 12 திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வில் சீன அரசு தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

அமெரிக்க உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வில் சீன அரசு தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 25 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சன் லாமா தேர்வு செய்யப்பட்டதில் சீன அரசின் தலையீடு இருந்தது. அதன் பின்னர், பஞ்சன் லாமா சிறுவனாக இருந்தபோதே காணாமல் போனார். அவருக்குப் பதிலாக தாங்கள் தேர்வு செய்யும் வாரிசை நியமிக்க சீன அரசு முயற்சித்து வருகிறது.  இச்செயல் மத சுதந்திரத்துக்கு எதிரானதாகும் இவ்வாறு அவர் கூறினார்.

திபெத்தில் அமெரிக்க தூதரகம் நிறுவவும், அடுத்த தலாய் லாமா தேர்வில் சீன அரசின் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய சர்வதேச கூட்டணியை உருவாக்கவும் முன்னாள் அதிபர் டிரம்ப் பதவிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments