பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் டிஎச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி: சிபிஅய் குற்றச்சாட்டு பதிவு

புதுடில்லி, மார்ச் 26- மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (பிஎம்ஏஒய்) அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் போலி ஆவணங்கள் மூலம் டிஎச்எப்எல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபி அய் குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர்ஆவாஸ் யோஜனா திட்டம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கடுமை யான நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள டிஎச்எப்எல் நிறு வனத்தின் மேம்பாட்டாளர்க ளான கபில்வாத்வான் மற் றும் தீரஜ் வாத்வான் ஆகி யோர் தற்போது மோசடி வழக்கு தொடர்பாக சிறை யில் உள்ளனர்.

இது தொடர்பாக 24.3.2021 அன்று விசாரணை நடத்திய சிபிஅய், கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகிய இருவரும் போலியான பெயர்களில் ரூ. 14 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் வழங்கியதாகக் கூறி இதற்காக ரூ.1,880 கோடி வட்டி சலுகையை மத்திய அரசிடமிருந்து பெற்றதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பொருளாதாரத்தில் நலி வடைந்த பிரிவினர்களுக்காக (இடபிள்யூஎஸ்) வீடு கட்டித் தருவது இத்திட்டம் ஆகும். இதன்படிகடன் வசதியுடன் வட்டி மானியம் வழங்குவதற் காக பிஎம்ஏஒய் திட்டம் உரு வாக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் மானிய சலுகைகளை வீட்டுக் கடன் வழங்கிய நிறுவனங்கள் அது தொடர்பான ஆவணங் களை தாக்கல் செய்து மத்திய அரசிடமிருந்து வட்டி மானி யம் பெறும். இதன்படி டிஎச் எப்எல் நிறுவனம் டிசம்பர் 2018ஆம்ஆண்டு 88,651 வீட்டுக் கடன் வழங்கியதற் கான ஆவணத்தை தாக்கல் செய்து ரூ. 539.40 கோடியை வட்டி மானியமாக பெற்றுள் ளது. இது தவிர ரூ. 1,347 கோடி நிலுவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கணக்கு தணிக்கை செய்த போது கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகிய இருவரும் 2.6 லட்சம் மோசடி வீட்டுக் கடன் கணக் குகளை உருவாக்கியிருப்பதும் இவற்றில் பல பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருப்பதும் தெரிய வந் துள்ளதாக சிபிஅய் தெரிவித் துள்ளது. இவை அனைத்தும் நிறுவனத்தின் பாந்த்ரா கிளை மூலம் மேற் கொள்ளப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதன்படி 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை யான காலத்தில் ரூ.14,046 கோடி தொகை இந்தக்கணக் கிற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சிபிஅய் குற்றம் சாட்டியுள்ளது. இதில் ரூ. 11,755 கோடி பல போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் சிபிஅய் குறிப் பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாத்வான் சகோதரர் கள் மீதும் யெஸ் வங்கி நிறு வனர் ராணா கபூர்மீதும் சிபி அய் வழக்கு பதிவு செய்தது. இதில் டிஎச்எப்எல் நிறுவனத் தில் ராணா கபூர் முதலீடு செய்து ஆதாயமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மோசடியானது 2018ஆம்ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத் தில் நடைபெற்றுள்ளது. இந்த காலத்தில் ரூ. 3,700 கோடியை யெஸ் வங்கி டிஎச் எப்எல் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. இதற்கு பலனாக ரூ. 600 கோடியை வாத்வான் சகோத ரர்கள் ராணா கபூர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் நிர்வகிக்கும் நிறுவனத் தில் முதலீடு செய்துள்ளதாக சிபிஅய் வழக்கு பதிவு செய்து உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராணா கபூர் கைது செய்யப் பட்டிருந்தார்.

Comments