பிற இதழிலிருந்து... : அ.தி.மு.க.வினரை தொடர்ந்து பா.ஜ. வேட்பாளர்களும் மோடி, அமித்ஷா படங்களுக்கு கல்தா

அதிமுகவினரை தொடர்ந்து பாஜக வேட்பாளர்களும்   மோடி, அமித்ஷா  படங் களை பிரச்சாரத்தில் தவிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி, .பி.எஸ். பிரச்சாரத்தின் போது அதிமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பற்றி மட்டும் தான் பேசி வருகிறார்கள். மோடி பற்றியோ, மத்திய அரசு பற்றியோ இதுவரை தப்பித்தவறிக்கூட வாய் திறக்கவில்லை. அதேபோல் அவர்கள் பங்கேற்கும் பிரச்சாரத்தில் பாஜ தலைவர்களின் படம், கொடி உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்களின் படங்கள் மற்றும் அவர்களை பற்றி பேசினால் மக்களுக்கு கோபம் தான் வரும். அது எதிர் ஓட்டாக மாறி விடும் என்று அதிமுகவினர் பயந்து வருகின்றனர். இது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் டில்லி மேலிடம் வரை போய் உள்ளது. டில்லி தலைமை அதிமுக மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக மீது உள்ள கோபத்தால் தான் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரும் போது பா.. வேட்பாளர்கள் தொகுதியில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டு எடுத்து வரும் நிலையில் தற்போது பாஜ வேட்பாளர்களும் மோடி, அமித்ஷா படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் படம் போட்டு தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா, எடப்பாடி, .பன்னீர் செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மேலும் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டும் தான் அதில் இடம் பெற்றுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜ துணைத் தலைவர் நயினார் நாககேந்திரன் பெயரில் துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டுள்ளது. அதிலும் பாஜ தலைவர்கள் யார் பெயரும் இடம் பெறவில்லை. வெறும் தாமரை சின்னம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் ஆயிரம் விளக்கில் எனக்கு வாக்களியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதில் தனது படம் மற்றும் ஜெயலலிதா படத்தை மட்டுமே போட்டுள்ளார். பாஜக தலைவர்கள் யார் படமும் இதில் இடம் பெறவில்லை. பாஜக தேசிய தலைவர்களை பாஜக வேட்பாளர்களே தவிர்த்து வருவது பாஜவின் உண்மையான தொண்டர்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நன்றி: 'தினகரன்' 27.3.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image