நன்னிலம் - திருவாரூர் - மன்னார்குடி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற கிருமிகள் நம்மை அழிக்கத் துடிக்கின்றன

இந்தக் கிருமிகளை தடுக்கும் தடுப்பூசிதான் தி.மு.அதற்கான கிருமிநாசினிதான் திராவிடர் கழகம்!

சென்னை, மார்ச் 19 கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற கிருமிகள் நம்மை அழிக்கத் துடிக்கின்றன. இந்தக் கிருமிகளைத் தடுக்கும் தடுப்பூசிதான் தி.மு.. அதற்கான கிருமி நாசினிதான் திராவிடர் கழகம் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பயணத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்றுமுதல் (18.3.2021) தொடங்கினார்.

தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரையின் விவரம் வருமாறு:

குடவாசலில் நன்னிலம் தொகுதியில் பரப்புரை

 நேற்று (18.3.2021) மாலை நன்னிலம் தொகுதியிலிருந்து தொடங்கினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நன்னிலம் தொகுதி தி.மு..வேட்பாளர் என்.ஜோதிராமனை ஆதரித்து குடவாசல் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.

 திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசன் வரவேற்புரையாற்றினார்.

மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் இரா.கோபால், மண்டல தலைவர் ஓவியர் சங்கர், மாவட்ட துணைத் தலைவர் அருண் காந்தி,  மாவட்ட துணைச் செயலாளர் .வீரையன், மாவட்ட அமைப்பாளர் பி.சாமி நாதன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தா கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் முனைவர் அதிரடி .அன்பழகன், முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

கலைஞரின் மண்ணில் முதல் கூட்டத்தை தொடங்கு கிறோம் என்பது எங்களுக்கு பெருமை  அளிக்கிறது. இங்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நண்பர் ஜோதிராமன் அவர்களை மாணவர் பருவத்திலிருந்தே அறிந்தவன். கரோனா யாரை எப்போது தொற்றும் என்று சொல்லமுடியாது. அனைவரும் முகக்கவசம் அணியாமல் இருக்கலாமா?  கரோனாவை விட கொடிய நோய் வடக்கி லிருந்து வந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும். தி.மு..கூட்டணிதான் ஆட்சியமைக்க போகிறது என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தி.மு.. தேர்தல் அறிக்கை கதாநாயகனாக திகழ்கிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

காமராசர், அண்ணா, கலைஞர் என்று வரிசையாக நமக்காக பாடுபட்ட தலைவர்கள்.

கல்வி நமது பிள்ளைகளுக்கு இருந்ததா?

அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்யவேண்டும் என்ற குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தார். அதை மீண்டும் கொண்டு வரத்தான் இப்போது ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. இதை முறியடிக்க தி.மு‌.கழக கூட்டணியால்தான் முடியும். இந்தக் கூட்டணி இலட்சியக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி. இந்த வெற்றி எவ்வளவு முக்கியமோ அதே அளவு எதிர்கூட்டணியின் தோல்வியும் முக்கியம் என்பதை உணர்ந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

கூட்டத்தில் குடவாசல் ஒன்றிய தி.மு.. செயலாளர் பிரபாகரன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் அன்பரசன், குடவாசல் பேரூர் செயலாளர் முருகேசன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் லட்சுமி, சி.பி.அய் நமசு, நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், செயலாளர் பூபேஷ் குப்தா, குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடவாசல் ஒன்றிய தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார்.

திருவாரூரில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் தொகுதி தி.மு..வேட்பாளர் பூண்டி எஸ்.கலைவாணனை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை வகித்தார்.

ஆசிரியர் முனியாண்டி, மண்டலத் தலைவர் சங்கர், மாவட்ட துணை தலைவர் அருண் காந்தி, பொதுக்குழு உறுப்பினர் சுரேசு, மண்டல மகளிரணி செயலாளர் செந்தமிழ்ச் செல்வி, மாவட்ட வி.தொஅணி தலைவர் இரத்தினசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன், முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரைக்கு பின் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

கலைஞர் இல்லை என்றோ, அண்ணா இல்லை என்றோ, பெரியார் இல்லை என்றோ எண்ணவேண்டாம். தளபதி மொத்த உருவமாக இருக்கிறார். கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற கிருமிகள் நம்மை அழிக்க துடிக்கின்றன.

ஜாதி வெறி, மதவெறி போன்ற கிருமிகளை அழிக்க வல்லதுதான் தி.மு.. தலைமையிலான கூட்டணி.

இந்த கிருமிகளை தடுக்கும் தடுப்பூசி தான் தி.மு..

அதற்கான கிருமிநாசினி தான் திராவிடர் கழகம்.

தமிழகத்தை மீட்போம் என்பது மட்டுமல்ல. .தி.மு.. வையும் மீட்டெடுக்கும் பணியைத் தான் செய்து வருகிறோம்.

1971 இல் கலைஞர் பெற்ற வெற்றியைவிட இந்த தேர்தலில் தளபதி அவர்கள் அதையும் தாண்டி வெற்றியை பெறுவார்.

உங்களுக்கு நினைவூட்டுவது எங்கள் கடமை.

பா... போட்டி போடுவது நோட்டாவிடம் தான்.

விலைக்கு வாங்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். விலை போகாத தி.மு..உறுப்பினர்களை வெற்றியடைய செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தலில் இரண்டு அணிகள் தான்.மற்றதெல்லாம் பிணி.. ஒன்று கொள்கை கூட்டணி. மற்றொன்று பதவிக்கான கூட்டணி.

முதுகெலும்பு இல்லாத இந்த ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும். இன்றைக்கு கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி திட்டங்கள், நீட் தேர்வு என்று ஒவ் வொன்றையும் திணித்து வருகிறார்கள்.

இந்த ஆட்சி நீடிக்கலாமா?

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

தட்டிக் கேட்கும் காவல்துறைக்கும் பாதுகாப்பு இல் லையே! பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளாரே!!

இந்த சூழ்நிலையில் இருந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றப்பட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப் பெரிய வெற்றி அடையசெய்ய  வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

இயற்கை உழவர் இயக்க மாநில துணை தலைவர் வரதராசன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன், .தி.மு.. கொள்கை பரப்புச் செயலாளர் சீனிவாசன், நகர் தி.மு.. செயலாளர் வாரை பிரகாஷ், நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமிர்தராஜ்,  தி.மு.. வி.தொ.அணி துணை செயலாளர் சங்கர், நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி, செயலாளர் சரசுவதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப் பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

நீடாமங்கலத்தில் தமிழர் தலைவர் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மன்னார்குடி தொகுதி தி.மு..வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து நீடாமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத் திற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாநில விவசாய அணி செயலாளர் இரா.கோபால், பொதுக்குழு உறுப்பினர் .சிவஞானம், மாவட்ட துணை செயலாளர் புட்பநாதன், நகர தலைவர் அமிர்தராசு, ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, நகர் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

''தளபதி வராரு விடியல் தர போறாரு'' என்றால் தமிழகத்தை மட்டுமல்ல .தி.மு..வையும் சேர்த்து மீட்கபோகிறார். அவர்களின் நன்மைக்காக அவர்கள் தோற் கடிக்கப்பட வேண்டும்.தி.மு..வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.ஏனென்றால் பெரியாரின் கரம் பிடித்த கலைஞரின் கரம் பற்றியவர்கள் இவர்கள்.

டில்லியிலிருந்து வந்த அமித்ஷா .தி.மு..விடமிருந்து தொகுதிகளை பெற்றுக்கொண்டு நாங்கள் ஆட்சியமைப் போம் பங்கேற்போம் என்கிறார்.

இங்கே இருக்க கூடிய முதல்வர் சவால் விடுகிறார். எப்போது பா...வோடு சேர்ந்தீர்களோ அப்போதே உங்களது தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.

தி.மு.. வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுக்காக அல்ல.. தளபதி ஸ்டாலினுக்காக அல்ல..

உங்களுக்காக! உங்கள் சந்ததிக்காக!!

நமது பிள்ளைகளின் கல்வி உரிமை நாசம் செய்து விட்டார்கள். மீண்டும் குலக்கல்வி திட்டத்தை செயல்படுத்த முனைகிறார்கள். இந்த ஆட்சியை அகற்றி சூழ்ந்திருக்கும் இருளை போக்கி ஒளி பிறக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

கூட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜ மாணிக்கம், ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், .தி.மு.. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், வி.சி.. மாநில துணை செயலாளர் ரமணி, தி.மு.. மகளிரணி நிர்வாகி ராணிசேகர், தி.மு.. மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரப்புரை பயணக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் பேரா..சுப்பிரமணியம், மாநில மாண வர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

Comments