ஒற்றைப் பத்தி - மூன்றுவித நம்பிக்கைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 12, 2021

ஒற்றைப் பத்தி - மூன்றுவித நம்பிக்கைகள்!

மக்களின் நம்பிக்கைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:

1. தனிநபர் மற்றும் சமூகத்துக்கு நன்மை பயக்கும் நம்பிக்கைகள்.

2. தனிநபர் மற்றும் சமூகத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நம்பிக்கைகள்.

3. தனிநபர் மற்றும் சமூகத்துக்கு நன்மையும் பயக்காத, தீங்கும் இழைக்காத நம்பிக்கைகள்.

ஒரு பெண் கருவுறுகிறாள். அவளுக்கு ஆரோக்கியமான உணவு அளிக்கப்பட வேண்டும். குழந்தையும், தாயும் பிழைத்து நலமுடன் வாழவேண்டும் என்பதே இலக்கு. பெண் கர்ப்பமாக இருக்கும்போதும் குழந்தை வளர்ப்பின் போதும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் பிராந்திய மாறுதல்களோடு உலகம் முழுவதும் உள்ளன.

குங்குமப்பூ என்பதை உண்டால் குழந்தை சிகப்பாகப் பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இது ஆதாரமற்றது என்ற போதும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை. கர்ப்பமாக இருக்கும்போது இறைச்சி உணவு சாப்பிடக் கூடாது என்று சில சமூகங்களில் நம்பிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான, தீமை விளைவிக்கும் நம்பிக்கை ஆகும். குழந்தைக்குப் பிறந்த உடன் தாயின் சீம்பாலைத் தரவேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. இது நன்மை தரும் நம்பிக்கை ஆகும். சீம்பால் மிகுந்த சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு காரணிகளைக் கொண்டது.

ஒரு மருத்துவர் அல்லது பகுத்தறிவாளரின் கடமை யாதெனில் இவை மூன்றையும் பகுத்து தீமை பயக்கும் நம்பிக்கைகளைக் கண்டறிந்து அதனை மக்களிடையே பிரச்சாரம் செய்து அகற்றுவதே ஆகும். போலி அறிவியல் மரபு மருத்துவம் என்பது இவ்வாறான ஒரு தீமை பயக்கும் நம்பிக்கையாக மாறி உள்ளது. தடுப்பூசி மறுப்பாளர்கள் முதல், பிரசவத்துக்கு மருத்துவமனை போக வேண்டாம் என்பவர்கள்வரை பலர் சமூகத்துக்கு மாபெரும் கேடாக மாறியுள்ளனர்.

‘‘போலி அறிவியல் - மாற்று - மருத்துவம் மூடநம்பிக்கை -ஒரு

விஞ்ஞான உரையாடல்'' டாக்டர் சட்வா MBBS DA DNB 

படித்தவர்களே மயங்கும் நிலை உள்ள நாட்டில் இது ஓர் உரத்த சிந்தனையே!

 - மயிலாடன்

No comments:

Post a Comment