பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்காதீர்கள் - மேற்குவங்காளத்தில் விவசாயிகள் பிரச்சாரம்

 கொல்கத்தா, மார்ச் 15 பா. ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற முழக்கத்துடன் மேற்குவங்காளத்தில் விவசாயிகள் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.

டில்லியில் வேளாண் சட்டங் களுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள், மேற்கு வங்காளம்  சென்று அங்கு பாஜக வுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத் தில் ஈடுபட்டு உள்ளனர்.

எந்தப் பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டில்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 109 நாட் களை கடந்துள்ளது. இவர்கள், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜக வுக்கு எதிராக பரப்புரை மேற் கொள்வோம் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி ஒரு குழு மேற்குவங் கத்திற்கு விரைந்து தங்களின் பரப் புரையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் விவசாயிகள் அதிகம் இருக் கக்கூடிய கிராமப்புறங்களில் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பா.  ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற முழக் கத்துடன் பேரணி நடத்தி வருகின் றனர்.

கிரித்தி கிசான் யூனியன், யோகேந்திர யாதவின் ஸ்வராஜ் இந்தியா, சன் யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்கங்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பரப் புரையை தீவிரப்படுத்தி யுள்ளன. மகாபஞ்சாயத்து என்று அழைக் கப்படும் விவசாயிகள் அடங்கிய கிராமப்புற பஞ்சாயத்துக்களில் இவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவை தவிர வரும் மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங் கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங் களில் மிகப்பெரிய அளவில் இந்த முழு அடைப்பை செயல்படுத்தவும் விவசாய சங்கங்கள் வியூகம் வகுத் துள்ளன.

Comments