முதலமைச்சருக்கும் - துணை முதலமைச்சருக்கும் சம்மன் அனுப்பப்படுமா?

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் 2018 இல் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டு, இதுவரை பத்து முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில்மர்மம்' இருக்கிறது என்று சொன்ன துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வத்துக்குப் பலமுறை - ஆணையம் அழைப்பாணை விடுத்தும் ஆஜராகவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பொழுது திருவாயால் ஒன்றை மலர்ந்தருளியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் கருணாநிதியும், ஸ்டாலினும்தான்!' என்று கூறியுள்ளார்.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குசம்மன்' அனுப்பி விசாரணை நடத்தவேண்டும்.

முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் ஏதோவிவரங்கள்' தெரிந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஆணையம் இருவருக்கும் சம்மன் அனுப்புமா?

எங்கே பார்ப்போம்??

Comments