கடத்தூரில் "திராவிடம் வெல்லும்" பொதுக்கூட்டம்

தருமபுரி, மார்ச் 12 தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 5.3.2021 அன்று மாலை 10 மணியளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி மண்டல திராவிடர் கழக தலைவர் .தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவர் பெ.சிவலிங்கம் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் .மாதன், ஒன்றிய செயலாளர் இளங்கோ, திமுக ஒன்றிய குழு உறுப்பினர் சொ.பாண்டியன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன், கடத்தூர் திமுக நகர செயலாளர் கேஸ்.மணி, திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் கோ.குபேந்திரன் ஆகியோர் முன்னி லையேற்றனர். திமுக மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் கீரை.விஸ்வ நாதன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் .யாழ்திலீபன் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.

மாவட்ட திராவிடர் தலைவர் வீ.சிவாஜி தொடங்கி வைத்து பேசினார்.

திராவிடம் வெல்லும் என்னும் தலைப்பில் திராவிடர் கழக சொற் பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக நிர்வாகிகள், பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இப்பொதுக் கூட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரி யரணி செயலாளர் மு.பிரபாகரன், ஆசிரியரணி துணைத் தலைவர் தி.சிவாஜி, விடுதலை வாசகர் வட்ட நிர்வாகி, .நடராஜன், செந்தில்குமார், இராஜேந்திரன், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், செயலாளர் மா.சுதாமணி, கவிஞர் கார்த்திக், பாரதிராஜா, வேணு கோபால், .முனுசாமி, கோ.முருகன், மாணவர் கழக செயலாளர் .பிர தாப், பவுத்த நெறியாளர் கு.பால கிருஷ்ணன், பா.குமுதா, பொ.தங்கராஜ், மாயவன், தீ.மாதவன், கொ.சுந்தர்ராஜன், சி.உதயகுமார், செந்தில்குமார். வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகிகள் தீ.அமுல்செல்வன், .தமிழரசன், மு.பரமசிவம், கொ. கண்ணப்பன், .வீரன், சொக்கலிங்கம், இராஜாங்கம் அரிகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட மாணவர் கழக தலைவர் சி.சமரசம் நன்றி கூறினார்.

Comments