பெரியார் மருந்தியல் கல்லூரியில்மூலிகை மருந்தியல் துறை சார்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை


 திருச்சி, மார்ச் 10- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில் பிறிஜிலிசி : கி HPTLC : A Modern Technique in Drug Development  குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை 5.3.2021 அன்று நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா மாலை 4 மணி யளவில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல் லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை யில் மூலிகை மருந்தியல் துறைத்தலைவர் முனைவர்

. சிறீ.விஜய கிருபா வரவேற்பு ரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மும்பை Anchrom Enterprises, Pvt. Ltd.,நிறு வனத்தைச் சார்ந்த பங்கஜ் டர்மாலே (Mr. Pankaj Tarmale)  கலந்து கொண்டு HPTLC  குறித்த முழு செயல் விளக்கங் களை மாணவர்களுக்கு தெளி வாக எடுத்துரைத்ததுடன் தொழில் நுட்ப பயிற்சியினை யும் மாணவர்களுக்கு வழங்கி னார். இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசி ரியர் முனைவர் .மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனை வர் கோ.கிருஷ்ண மூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக மூலிகை மருந்தியல் துறையின் முதுநிலை மருந்தியல் மாண வர்  வி.அருண்நிவாஸ் நன்றி கூற பயிற்சி பட்டறை இனிதே நிறைவடைந்தது. இப்பயிற்சி பட்டறையின் மூலம் 30 முதுநிலை மருந்தியல் மாண வர்கள் பயனடைந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.

Comments