மயிலாடுதுறையில் கலந்துரையாயாடல் கூட்டம்

மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் கொள்ளிடம் ஒன்றியத்தில் நடத்தவுள்ள 'திராவிடம் வெல்லும்தெரு முனைப் பிரச்சாரங்களுக் கான ஆயத்த கலந்துரையா டல் கூட்டம் 18-.3.-2021 காலை 11 மணியளவில் கொள்ளிடம் கடைவீதி ஜெகபர் கீற்றுக் கடையில் நடைபெற்றது.

.. தலைவர் இளங் கோவன் தலைமை வகித்தார். கொள்ளிடம் ஒன்றிய செய லாளர் பாண்டுரங்கன் பக தோழர் ஆர்.தியாகராஜன் திமுகழக ஞானமணி மதிமுக நூருஜின் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சீர்காழி நகர கழக தலைவர் சபாபதி வரவேற்புரையாற்றினார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் எப்படி பணி யாற்றி திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண் டும் என்பதையும் திராவிடம் வெல்லும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது பற்றியும் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேக ரன் மாவட்ட பக தலைவர் ஞான. வள்ளுவன் இருவரும் விரிவாக கூட்டத்தில் எடுத்து ரைத்தனர்.

வல்லம்படுகை நகர கழக தலைவர் வை.அர்ஜுனன் பாஸ்கர் ஆர்.பன்னீர் செல் வம் மதிமுக அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை  வழங்கினர். கொள்ளிடம் ஒன்றியத்தில் புத்தூர் கொள்ளிடம் பெரம் பூர் கோதண்டபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரக் கூட் டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. கொள்ளிடம் ஒன்றிய கழக செயளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Comments