இன்னொரு பொதுமுடக்கமா...? நாடு தாங்காது... எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

புதுடில்லி. மார்ச். 26- இந்தியா வில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக மெடுத்து உள்ளது. பிப்ரவரி மாதத்தில் கரோனா பாதிப் புக்கு உள்ளாவோரின் எண் ணிக்கை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 800 ஆக இருந்தது. இது தற்போது 40 ஆயிரத்திற் கும் மேலாக அதிகரித்துள் ளது.

தொற்று பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிக ளில் கட்டுப்பாடுகள் அதிக ரிக்கப்பட்டு வருகின்றன. பகுதி நேர ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகின் றது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதுள்ள நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால், அதை நாடு தாங்காது என்று எச் சரிக்கை செய்துள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதமாக்கும் கட்டாயமான சூழலில் இருக்கிறோம். தொடு தல் தொடர்பான சேவைக ளைக் கொண்ட துறைகள் தீவிரமாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந் நிலையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிப்பு, ஊர டங்கு, கட்டுப்பாடுகள் என்ற நிலை ஏற்படுமெனில் அதன் பாதிப்பை நிச்சயம் தாங்க முடியாது என்று ரிசர்வ் வங்கி யின் மாதாந்திர அறிக்கையில் துணை ஆளுநர் மைக்கேல் தேபபிரதா பத்ரா குறிப் பிட்டுள்ளார். இதையே டூஷே வங்கியின் (ஞிமீutsநீலீமீ ஙிணீஸீளீ) தலைமை பொருளாதார வல்லுநர் கவுசிக் தாஸூம் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கிக் கணிப்புப்படி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 26.2 சதவிகிதமாகக் கணிக்கப் பட்டு உள்ளது. இந்த விகிதம் மிகக் குறைவு. எங்களுடைய கணிப்பில் இது இன்னும் குறைவாக 25.5 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது. இந் நிலையில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட் சத்தில் பொருளாதாரம் மோச மான பாதிப்பைச் சந்திக்கும் என்று அவர் தெரிவித்துள் ளார். கரோனா தொற்றுப் பரவலையொட்டி, நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டு, நேற்றுடன் (மார்ச் 25 ஓராண்டு நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments