மத்திய புலனாய்வு அமைப்புகள் நடத்தை விதிகளை மீறுகின்றனதேர்தல் ஆணையருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம், மார்ச் 6 மத்திய புலனாய்வு அமைப்புகள் கேரளத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொள் வதாக முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்களின் தூண்டுதல் பின்னணியிலேயே இவ்வாறு நடப்ப தாகவும் பினராயி விஜயன் குறிப் பிட்டுள்ளார். மத்திய அமலாக்க இயக் குநரகம் (.டி) பலமுறை, கேரள மாநில அரசு நிறுவனமான கிப்பி அதிகாரிகளை அழைத்து துன்புறுத்தியுள்ளது. பெண் அதிகாரிகள் கூட அவமரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளனர்.

மே 2019- இல்கிப்பிவழங்கிய மசாலா பத்திரம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது இப்போது நடந்த ஒன்றல்ல. உடனடியாக விசாரிப்பதற்கு எந்த ஒரு அவசர தேவையும் இப்போது எழ வில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 28 அன்று கொச்சியில் நடைபெற்ற பாஜக பிரச் சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை, அவர்களின் அரசியல் ஈடுபாட்டின் அறிகுறி யாகும். கிப்பியின் நடவடிக்கைகளுக்கும் மாநில அரசாங் கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கும் எதிராக அவர்கள் பேசினர். ஊட கங்களுக்கு விசாரணை மற்றும் தக வல்களை கசியவிடுவதில் .டி. தேவை யற்ற அவசரம் காட்டுவது இத்தகைய அரசியல் தலையீட்டின் விளைவாகும்.

நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குநரகம் உள்ளது. ஒரு வழக்கில் சாட்சிகள் தகவல் மற்றும் ஆதாரங்களைசேகரிக்க அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கே தேர்தலை மய்யப்படுத்தி ஊடக பிரச்சாரங்களுக்கு  இத்தகைய விவரங் கள் பயன்படுத்தப்படுகின்றன. மார்ச் 2 ஆம் தேதி, கிப்பி தலைமை நிர்வாக அதிகாரியை .டி.வரவழைத்ததாக மின் னணு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதுவரை அவருக்கு இதுபோன்ற தாக்கீது கிடைக்கவில்லை. தேர்தல் சூழ்நிலையை மோசமாக்கவே இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களில் கசிந்து வருகின்றன.

அதிகாரிகள் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கவே மத்திய நிதியமைச்சரின் தலையீடு. விசாரணை அமைப்புகளின் அதிகாரம், மத்திய ஆளும் கட்சியினாலும் கேரள எதிர் கட்சியாலும் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய இப்பிரச்சனையில் தலையிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். விசாரணை முகமைகள் சட்டத்தின்படி செயல் படுவதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் தலையிடவேண்டும் என் றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள் ளார்.


Comments