இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு நன்றி!

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் எம்.பி. - குளோபல் சுரேந்திரன் அறிக்கை

லண்டன், மார்ச் 26- அய்.நா. மனித உரிமை மன்றம் கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திய, தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலினுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்மற்றும் குளோபல் தமிழ் ஃபோரம் லண்டன் செய்தித் தொடர்பாளர் சுரேந்திரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வலியுறுத்தி, தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து அய்.நா.வில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தது.எனினும் தி.மு.. தலைவர்மு..ஸ்டாலின் உள்ளிட்டோரின் அழுத்தங்களால் இலங்கைக்கு எதிராக நீண்ட அறிக்கை ஒன்றையும் அய்.நா. மன்றத்தில் இந்தியா சமர்ப்பித்தது. இந்திய அரசு இப்படி ஒரு அறிக்கையை அளித்ததற்கும், இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்ததற்கும் காரணமான தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தமது கூட்டறிக்கையில்  தெரிவித்து உள்ளனர்.

Comments