நெஞ்சம் நிறைந்த நன்றியும் சீலமிக்கப் பேருரையும் “வீரமணி அவர்களே நீங்கள் அடிக்கடி பீகார் வர வேண்டும்!“

இந்த மண் ஞானபூமி, இங்கே சமத்துவம் வளரும் வரை மக்களாட்சி நடைமுறை வெற்றி பெறாது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் 1925-ஆம் ஆண்டிலி ருந்து நீங்களும் சமூகநீதிக்காக களம் கண்டு வந்திருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களை நான் மூன்று நாட்களாக அவர்களிடமிருந்து (வீரமணி அவர்களிடமிருந்து) தெரிந்து கொண்டேன், அவர் இங்கே உரையாற்றும் போதும் நாம் சமூகநீதிக்கான பயணம் குறித்து அறிந்துகொண்டோம். ஆகவே நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கி றேன். நீங்கள் இங்கே வரவேண்டும் - வர வேண்டும். மீண்டும் மீண்டும் வரவேண் டும். பெரியார் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும். சமூகநீதி பற்றிப் பேச வேண்டும். பீகார் மக்களின் சார்பிலும் என் னுடைய சார்பிலும் கோரிக்கை வைக்கி றேன். நீங்கள் பீகாரையும் உங்களின் மற் றொரு ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மதுவை ஒழித்து விட்டோம், இங்கு மற்றொரு பிரச்சினை எழுந்துவிட்டது. அது கள்ளுக்கடை மூடப்பட்டதால் அதை நம்பி இருந்த பலரின் வருமானம் போய் விட்டது.

சூரிய ஒளி விழுந்த உடன் கள் போதை பானமாக மாறிவிடுகிறது. அதாவது போதை யாக மாறாத கள் (பதநீர்) அதிகாலையில் சேகரிக்கும் கள் (பதநீர்) பல்வேறு நல்ல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தியில் நீரா (பதநீர்) என்று கூறுவார்கள். நாங்கள் இது குறித்து பல்வேறு ஆய்வு களைச் செய்தோம். அப்போது எங்களுக்கு தமிழ் நாட்டில் வெகு மக்களால் பருகப்படும் பதனீர் குறித்தும் தெரிய வந்தது. தமிழ் நாட்டில் மிகவும் அதிக அளவு பனைமரம் உள்ளது.

ஆகவே நாங்கள் எங்கள் அதிகாரிகளை அனுப்பி பதநீர் குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாட்டில் இருந்து பதநீர் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டு வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் பீகாரிலும் பதநீர் அருந்து வதை நடைமுறைப்படுத்துவோம். இன்று பனைமரத்தில் இருந்து கள் இறக்கும் தொழி லாளர்களுக்கு இன்னும் ஓராண்டிற்குள் புதிய வருவாய் தரக்கூடிய தொழிலை ஏற் படுத்தித் தரவிருக்கிறோம்.

இதன் மூலம் கள் இறக்குதல் போன்ற தேவையற்ற   செயல்களைக் கைவிட்டு விட்டு, புதிய பாதையை தேர்ந்தெடுக்கட்டும். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பீகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூக நீதியோடு கலந்த வளர்ச்சி தான், “குரோத் வித் ஜஸ்டீஸ்நாங்கள் வெறும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசமாட்டோம் எங்கள் வளர்ச்சி சமூகநீதியை ஒன்று சேர்த்து கொண்டுசெல்லும் வளர்ச்சியாகும். அதா வது வளர்ச்சியின் லாபம் சமூகத்தில் மிக வும் ஏழ்மைப்பட்ட குடிமகனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே ஆகும். இது தான் எங்களின் முதன்மையான கொள்கை - அரசின் மூல மந்திரமும் ஆகும்.

- முதல் அமைச்சர் நிதீஷ்குமார்

(9.4.2016 அன்று பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அவர்களுக்குசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுவழங்கும் விழாவில் முதலமைச்சர் நிதீஷ்குமார் பேச்சுவிடுதலை 23.4.2016, .1)

Comments