ஜம்மு காஷ்மீராக மாறுமாம்! மேற்குவங்கம்? - பா.ஜ.க.வின் புரளிப் பேச்சு

 பாஜக தலைவருக்கு உமர் அப்துல்லா கண்டனம்

கொல்கத்தா, மார்ச். 10  திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறும் என்று பாஜகவின் சுவேந்து அதிகாரி கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை நீக்கிய ரத்து செய்த பிறகு காஷ்மீர் சொர்க்கமாகிவிட்டது என்று பாஜகவினர் கூறுகின்றனர். எனவே மேற்கு வங்கம் காஷ்மீர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது? என்று அவருக்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்கத்தில் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறி இருக்கும் சுவேந்து-மம்தாவின் நேருக்கு நேரான கடும் போட்டியை பார்க்க மேற்கு வங்க மக்கள் ஆயத்தமாகி விட்டனர்

மேற்கு வங்க தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக் கிறது. அங்கு மம்தாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார்.  மம்தாவின் வலது கர மாக செயல்பட்ட சுவேந்து அதிகாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்பட பலரை பாஜகவில் இணைத்தார் அமித்ஷா. மேலும், அங்கு யாத்திரை, பொதுக்கூட்டம் என  பாஜக. பிரதமர் முதல் ஜே.பி.நட்டா வரை மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வலம் வருகின்றனர்.

ஆனால் தான் எதற்கும் அஞ்சும் ஆள் இல்லை என்பதை மம்தா நிரூபித்தார். கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்தார். முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுங்கள் என்ற சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராமில் நிற்பதாக அறிவித்தார் மம்தா. 291 தொகுதிக்கான வேட் பாளர் பட்டியலையும் அதிரடியாக வெளியிட்டார். பாஜகவும் அங்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிற்பதாக அறிவித்தது.

நண்பர்களாக இருந்து எதிரி களாக மாறி இருக்கும் சுவேந்து-மம்தாவின் கடும் போட்டியை பார்க்க மேற்கு வங்க மக்கள் ஆயத் தமாகி விட்டனர். இந்த நிலையில் பெகலாவின் முச்சிபாராவில் 8.3.2021 அன்று நடந்த பேரணியில் பேசிய சுவேந்து அதிகாரி, ஷியாமா பிரசாத் முகர்ஜி இல்லாதிருந்தால், இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாக இருந் திருக்கும், நாங்கள் பங்களாதேஷில் வாழ்ந்திருப்போம். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறும் என்று கூறினார்.

சுவேந்து அதிகாரியின் இந்த கருத்துக்கு ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை நீக்கிய பிறகு காஷ்மீர் சொர்க்கமாகிவிட்டது என்று பாஜகவினர் கூறுகின்றனர். எனவே மேற்கு வங்கம் காஷ்மீர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது? எப்படியிருந்தாலும், வங்காளிகள் காஷ்மீரை நேசிக்கிறார்கள் மற்றும் காஷ்மீரை அதிக எண்ணிக்கையில் பார்வையிடுகிறார்கள், எனவே உங்கள் (சுவேந்து அதிகாரி)முட்டாள்தன மான, சுவையற்ற கருத்தை நாங்கள் மன்னிக்கிறோம்.என்று சுட்டுரையில் தெரிவித்தார் உமர் அப்துல்லா.

Comments