முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழுவை கலைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுடில்லி, மார்ச் 18- ‘முல் லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக் கப்பட்டுள்ள துணைக் குழுவை கலைப்பது சாத் தியமில்லை?’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு பாதிப்பு வராமல் நட வடிக்கை எடுக்க. துணைக் குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து செயல்பட வேண்டும்,’ என 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த துணைக்குழுவை எதிர்த்து, கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப் பெரி யாறு அணையை பாது காப்பதற்கே பிரதான கண்காணிப்பு குழு உரு வாக்கப்பட்டது. தற் போது, துணைக் குழுவும் கூடுதலாக உருவாக்கப் பட்டு உள்ளதால் கண் காணிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அதனால், துணைக் குழுவை கலைக்க உத்தர விட வேண்டும்,’ என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கள் .எம்.கன்வீல்கர் அமர்வில் 16.3.2021 அன்று விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பி லும் வாதங்கள் முன் வைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து நீதி பதிகள் பிறப்பித்த உத்தர வில்,

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப் பட்ட அனைத்து நட வடிக்கைகள் குறித்தும், 4 வாரத்தில் அதன் உயர் நிலை மேற்பார்வைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், அணை பராமரிப்பு குறித்த அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும்.

மேலும், அணையின்  நீர்மட்டம் உள்ளிட்ட புள்ளி விவரங்களையும் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதை மீறி னால், மாநில தலைமைச் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும். துணைக்குழு இல் லாமல் எப்படி அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்? அது, சாத்தியம் இல்லை,’ என கூறி, வழக்கை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments