காரைக்குடியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என கலந்துரையாடலில் முடிவு


 காரைக்குடி, மார்ச் 21- காரைக்குடியில்  மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் . அரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி, மாவட்ட செயலாளர் வைகறை முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் .ஜெகதீசன், மாவட்ட துணைத்தலைவர் கோ மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் . பழனிவேல், .. தலைவர் சு. முழுமதி, கல்லூர் செல்வமணி, கொரட்டி பாலு, வாரியன் வயல் ஜோசப், அருளானந்து, கல்லூர் அரவிந்தன், பொறியாளர் வினோத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புருனோ, அய்ஓபி வங்கி மேனாள் மேலாளர் .பாலகிருஷ்ணன்,  .சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். நடைபெற இருக்கின்ற 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்துவதென மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Comments