பெரியார் மருந்தியல் கல்லூரி பெற்ற முப்பெரும் விருதுகள்

சென்னை, மார்ச் 2 கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை தெரிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக Skill Indian நிறுவனமானது ஆண்டுதோறும் சாத னையாளர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டிற் கான விருது (Skill Indian Education Achievers Award - 2021)  வழங்கும் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்திலுள்ள விஜய் பார்க் ஹோட் டலில் 27.02.2021 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கு சிறந்த கல்வி யாளருக்கான (Education Excellence Award)  விருதும் முதுநிலை மருந்தியல் மாணவர்கள் வி. அருண் நிவாஸ், டி. இந்துமதி ஆகியோருக்கு சிறந்த மாணவருக் கான (Icon of Students Award)  விருதும் வழங்கப் பட்டுள்ளது. இவ்விருதானது தமிழ்நாடு, புதுச் சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பட தென் னிந்திய மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங் களில் சாதனையாளர்களை அடையாளம் கண்டு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.


Comments