முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம்

அய்.நா.வில் கமலா ஹாரிஸ் உரை

நியூயார்க், மார்ச் 18 முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் என்று அய்.நா.வில் கமலா ஹாரிஸ் கூறினார்.

 அமெரிக்காவின் துணை அதிபராக  தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்றிருக்கிறார்.இதன் மூலம் துணை அதிபர்  பதவியை வகிக்கும் முதல் பெண், முதல் கருப்பின அமெ ரிக்கர், முதல் தெற்காசிய அமெரிக்கர், முதல் இந்திய வம்சாவளி, முதல் தமிழ் வம்சாவளி என பல சாதனைகளைக் கொண்டுள்ளார். இந்த நிலையில் பெண்களின் நிலை குறித்த அய்.நா. ஆணையத்தின் 65-ஆவது அமர்வில் அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் தனது முதல் உரையை நிகழ்த் தினார். அவர் தனது உரையில் முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறை பாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:- இன்று ஜனநாயகம் அதிக அளவில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதை நாம் அறிவோம். தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஒரு சிக்கலான சரிவைக் கண் டுள்ளன. ஜனநாயகத்தின் நிலை அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் பொறுத்து அமைகிறது. முடிவெடுப் பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடு உள்ள ஜனநாய கத்தின் அடையாளமாக இருக்கிறது. பெண்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது. இது எல்லா இடங்களிலும் உண்மை. ஆனால் பெண்கள் தரமான சுகாதாரத்தை பெறுவதில் தடைகளை எதிர்கொள்ளும் போது, உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும்போது வறுமையில், வாழ அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் காலநிலை மாற்றத்தால் விகிதாச்சாரமாக பாதிக்கப்படுவது, பாலின அடிப்படையிலான வன்முறையில் மிகவும் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் பெண்கள் முடிவெடுப்பதில் முழுமையாக பங்கேற்பது கடினம். இதன் விளைவாக ஜனநாயகங்கள் செழிக்கப்படுவது மிகவும் கடின மானது. இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

 

மோடி ராமர் கிருஷ்ணர் அவதாரமாம்

கூறுகிறார் உத்தரகாண்ட் முதல்வர்

டெகராடூன், மார்ச். 18 உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடை பெறுகிறது. ஊழல் முறைகேடு, உட்கட்சி பூசல் காரணமாக அந்த மாநில முதல்வராக பதவி வகித்த திரிவேந்திர சிங் அண்மையில் தனது பதவி விலகினார்.

புதிய முதல்வராக அவரது நெருங்கிய உறவினர் தீரத் சிங் ராவத்  பதவியேற்றார்.இதையடுத்து, ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளா விழாவில் பேசிய தீரத் சிங் ராவத், “பிரதமர் நரேந்திர மோடிமக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரோடு  இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ள உலக தலைவர்களே ஆர்வம் காட்டுகின்றனர்.  அவர் நினைத் தால் எதையும் சாதிப்பார். பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரமாக பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஏற்றுக் கொள்வார் கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லைஎன்று மோடியே வெட்கப்படும் அளவுக்கு துதி பாடியுள்ளார். இது காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி போன்ற எதிர்க்கட்சியினருக்கு மட்டுமன்றி பாஜக-வைச்சேர்ந்தவர்களுக்கு உள்ளேயேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அவரவர் கட்சியின் தலைவருக்கு புகழாரம் சூட்டுவது தவறில்லை. ஆனால் ஒரு மனிதரை "கடவுளுக்கு' நிகராக ஒப்பிடுவது,சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை புதிய முதல்வர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்என்று காங்கிரஸ் மூத்ததலைவரும் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் விமர்சித்துள்ளார்.

 

Comments