விண்கலத்தை வழி நடத்திய பெண்

சிவப்புக் கோள் என அழைக்கப்படும் செவ்வாய்க் கோளில் நாசாவின் பெர்ச வரன்ஸ் ரோவர் விண்கலம் தரையிறங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தருணத்தை உலகம் முழுவதும் கொண் டாடக் காரண மானவர்களில் விண்வெளி ஆராய்ச்சியாளர் சுவாதி மோகனும் ஒருவர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி, ஒரு வயதானபோது அமெரிக் காவில் குடியேறினார். வடக்கு வர்ஜீனி யாவில் வளர்ந்தார். ஒன்பது வயதானபோது அவர் பார்த்த ஸ்டார் ட்ரெக் என்கிற தொலைக்காட்சித் தொடர் சுவாதியை ஆச்சரியப்படுத்தியது. வேற்றுக் கோளில் நடக்கிறவற்றை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த அறிவியல் புனை கதையால் ஈர்க்கப்பட்டுத் தானும் அப்படிப் புதுப் புது உலகங்களுக்குச் செல்ல நினைத் தார். அத்துடன் குழந்தைகள் நல மருத்துவ ராக வேண்டும் என்கிற கனவையும் இணைத்துக்கொண்டார். ஆனால், அது 16ஆம் வயதுவரைதான். அவருடைய இயற்பியல் ஆசிரியர், சுவாதியின் கனவுக்கு வேறு வடிவம் கொடுத்தார். பொறியியலைப் படித்துவிட்டு வானியல் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று நினைத்து அதன்படியே இயந்திர வானியலை முடித்தார். பிறகு வானியலில் முதுநிலைப் படிப்புடன் ஆய்வுப் படிப்பையும் நிறைவுசெய்தார்.

வானியல் ஆய்வில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது நாசாவின் மார்ஸ் 2020 திட்டம்.

காரணம், இதுவரை பிற கோள்களுக்கு அனுப்பப்பட்ட வான் உயிரியல் ஆய்வுக் கூடங்களிலேயே மிகச் சிறந்தது பெர்ச வரன்ஸ் ரோவர் விண்கலம். அதை வான் வெளியில் அதற்குரிய பாதையில் வழி நடத்தி செவ்வாய்க் கோளில் தரையிறக்கும் பணியைச் செய்த குழுவைத்தான் சுவாதி மோகன் வழிநடத்தினார். இவர் களது குழுவின் பணியை இந்தத் திட்டத் தின் கண்களும் காதுகளும் என்கின்றனர். இரண்டையும் வெற்றிகரமாக ஒருங் கிணைத்ததால் சுவாதிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாயில் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங் கியதும், பெர்சவரன்ஸ் ரோவர் செவ் வாயின் தரையைத் தொட்டுவிட்டது. தன் தேடலைத் தொடங்கவிருக்கிறது என்று சொன்னார் ஸ்வாதி. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2013ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் பல்வேறு பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார். கேசினி எனப்படும் சனிக்கோள் திட்டத்திலும் சுவாதி பங்களித் துள்ளார்.

Comments