நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

 கொல்கத்தா, மார்ச் 27 நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது என மத்திய பாஜக அரசை மேற்குவங்காள முதல் அமைச்சர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்ட சபைக்கு  8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல் அமைச் சருமான மம்தா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடு மையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பிரச்சார கூட்டத்தில் பேசிய மம்தா, நாட்டில் தொழில்துறை வளர்ச்சி நின்று விட்டது. அவரின் (பிரதமர் நரேந்திர மோடி) தாடி மட் டுமே வளர்கிறது. பிரதமர் மோடி தன்னை சில நேரங் களில் சுவாமி விவேகானந்தர் என கூறிக்கொள்கிறார் மற் றும் சில நேரங்களில் மைதா னங்களுக்கு தனது பெயரை வைக்கிறார். அவரது (பிரதமர் மோடி) மூளையில் ஏதோ தவறு உள்ளது. அவரது திருகு தளர்ந்துவிட்டது போல தெரிகிறது என்றார்.

Comments