கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகள்: வடகொரியா சோதனை - அமெரிக்கா அதிர்ச்சி


சியோல், மார்ச் 27- அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு, அந்த நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற் படுமா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கேற்ப வடகொரியாவை பல் வேறு வழிகள் மூலம் பேச்சுவார்த் தைக்கு அமெரிக்கா அழைத்தது. ஆனால் தங்கள் மீதான விரோத உணர்வை அமெரிக்கா கைவிடாத வரையில், அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று வடகொரியா நிரா கரித்தது.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி குறுகிய தொலைவுக்கு செல்கிற 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இந்த ஏவுகணைகள் மஞ்சள்கடலில் போய் விழுந்தன. ஆனால் இதை ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், வடகொரியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து உள்ளது.

25.3.2021 அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை வட கொரியா அடுத்தடுத்து ஏவி சோதித்தது.

இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி 25.3.2021 அன்று காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து கடலில் விழுந் ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தல் ஏற்படுத் தக்கூடியவை என்று கருதி, அவற்றை வட கொரியா ஏவிசோதிப்பதற்கு அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறித் தான் வடகொரியா வியாழன்று ஒரே நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்து இருக்கிறது.

இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பானும், தென் கொரியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்த ஏவுகணை களின் சிதைவுகள் எதுவும் தங்கள் கடல் பகுதியில் விழவில்லை என்றும் ஜப்பான் கூறியது.

ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா கருத்து தெரிவிக்கையில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து பார்த்து இருப்பது ஜப்பான் மற்றும் இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளது. இது தொடர் பாக அமெரிக்காவுடனும், தென் கொரியாவுடனும் நெருக்கமாக ஒருங் கிணைப்போம் என குறிப்பிட்டார்.

Comments