அரசமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதி செய்யும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும்

மன்மோகன் சிங் வேண்டுகோள்

புதுடில்லி, மார்ச் 27- இந்திய அரசமைப்பு மற்றும் ஜனநாய கத்தின் கொள்கைகளை உறுதி செய்யும் அரசாங்கத் திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப் படுகிறது. இதில் முதல்கட்டமாக 47 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (27.3.2021) வாக்குப் பதிவுநடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-  அசாம் மாநிலம் எனது 2ஆவது வீடு ஆகும். 28 ஆண்டுகள் நான் இந்த மாநிலத்தில் இருந்துதான் மாநிலங்கள வைக்குத் தேர்வு ஆனேன்.  5 ஆண்டுகள் நிதியமைச்சராக வும் 10 ஆண்டுகள் பிரதமரா கவும் நான் பணியாற்ற அசாம் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங் கினர்.

அசாமில் நீண்ட காலமாக தீவிரவாத பிரச்சினை நீடித்து வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் 2001-2016 ஆட்சிக் காலத்தில் அசாமில் புதிய அத்தியாயம் தொடங்கியது. மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடி யெடுத்தது.

ஆனால் இப்போது மதம், இனம், மொழிரீதியாக மக்க ளிடையே பிரிவினை தூண் டப்படுகிறது. மக்களின் அடிப் படை உரிமைகள் மறுக்கப் படுகின்றன. பதற்றமும் பய மும் வியாபித்து பரவியுள்ளது. அவசரகதியில் அமல் செய்யப் பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும் நாட் டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஏராளமான இளைஞர் கள் வேலைவாய்ப்பை இழந் துள்ளனர். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்திருக்கி றது.இந்த நேரத்தில் அசாமின் அமைதி, வளர்ச்சியை முன் னிறுத்தி  சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களிக்க வேண் டுகிறேன் என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Comments