‘‘இந்து தமிழ் திசை" ஆசிரியர் பார்வைக்கு

 தங்களது 27. 03.2021 நாளிட்டஇந்து தமிழ் திசைநாளிதழில் ‘‘ஈரோட்டில் வீரமணி கூட்டத்தைப் புறக்கணித்த தி.மு. வேட்பாளர்'' என்ற தலைப்பில் உண்மைக்கு மாறான தகவலை பதிவிட்டுள்ளீர்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

25.03.2021 ஆம் தேதி வியாழன் அன்று திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்ட ஈரோடு வீரப்பன்சத்திரம் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு தொகுதி தி.மு. வேட்பாளர் சு.முத்துசாமி அவர்கள் மாலை 6.50 மணிக்கே மேடைக்கு வந்து விட்டார். 7.20 வரை மேடையில் இருந்து - மேடையில் தமக்கும், கிழக்குத் தொகுதி வேட்பாளர் திருமகன் ஈவெரா அவர்களுக்கும் வாக்களிக்கும்படி பேசிவிட்டு, ‘நாளை 26.03.2021 மாலையில் தி.மு. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வருவதால் அந்த ஏற்பாட்டிற்காக செல்ல வேண்டும்என்பதை சொல்லிவிட்டு, ‘ஆசிரியர் அண்ணனிடம் இத்தகவலை தெரிவியுங்கள்என்று பொறுப்பாளர்கள் அனைவரிடமும் சொல்லி விட்டுச் சென்றார்.

மேடையில் ஆசிரியர் அவர்கள் "ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் திருமகன் ஈவெராவுக்கு கை சின்னத்திலும் - ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளர் சு.முத்துசாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்.

மேலும் பல ஊர்களில் வேட்பாளர்கள் இல்லாமலேயே வாக்கு கேட்டு பேசி வருகிறார். காரணம் வேட்பாளர்கள் பல பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க சென்று விடுவார்கள். தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில், வீரப்பன்சத்திரம் தி.மு. பகுதி செயலாளர் வி.சி.நடராஜன் இருந்தார். அவருடன் வருகை தந்த தி.மு. தோழர்கள் 100க்கும் மேற்பட்டோர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். கூட்டம் முடிந்த நிலையிலும்கூட்டம், ஆசிரியர் பேச்சு அனைத்தும் சிறப்பாக இருந்ததுஎன்று சொல்லி விட்டு மனநிறைவோடு சென்றார்கள். நடந்தஉண்மை இவ்வாறிருக்க தங்களது ஈரோடு செய்தியாளர் செய்தியை தவறாகச் சித்தரித்து அனுப்பியுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

- ஈரோடு .சண்முகம், அமைப்புச் செயலாளர்,

திராவிடர் கழகம்

குறிப்பு:  இந்தக் கடிதம் - ‘இந்து தமிழ் திசை' ஏட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Comments