மும்பையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

மும்பை, மார்ச் 21 அன்னை மணியம்மையார் அவர்களின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் 16-3-2021அன்றுமாலை 7.00 மணிக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

நினைவுநாள் கூட்டத்திற்கு மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கடவுள் மறுப்பு கூறி மும்பை திராவிடர்கழகச் செயலாளர் .அந்தோணி வரவேற்றார்.

அன்னை மணியம்மையார் உருவப்படத்துக்கு பெரியார் பிஞ்சுகள் மாலை அணிவித்தார்கள். மும்பை பகுத்தறிவாளர் கழகத்தலைவர் .இரவிச் சந்திரன், மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன், மும்பை கழக பொருளாளர் .கண்ணன், பெரியார் பாலாஜி, மகிழ்ச்சி மகளிர் பேரவை பொறுப்பாளர்கள் சு.வெண்ணிலா, .வளர்மதி உள்ளிட்டோர் அன்னையார் அவர் களின் தியாக கொள்கைப்பயணத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினர். பெரியார்பிஞ்சுகள்

.செந்தமிழரசி, .இலெமூரியன், .அறிவுமலர், .இனியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக  கழகத்தோழர் .பொன்மலர்  நன்றி கூறினார்.

கழகத் தோழர் பெரியார் பாலாஜி அன்னையார் பிறந்தநாளில் (மார்ச்10) அரசு பொது மருத்துவ மனை யில் குருதிக்கொடை வழங்கியதற்காக பொறுப் பாளர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Comments