அறிஞர் அண்ணா நூல் வெளியீடு - தொடக்கம் திரைப்படப்பாடல் வெளியீடு

திரைப்படங்கள் பொழுது போக்கிற்காக வருகின்ற நேரத்தில், அதில் கொள்கை அம்சங்கள் இருக்கவேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையாகும்

சென்னை பெரியார் திடல் - நூல்கள் வெளியீட்டு விழாவில்  தமிழர் தலைவர் உரை

சென்னை, மார்ச் 8  திரைப்படங்கள் பொழுது போக்கிற்காக வருகின்ற நேரத்தில், அதில் கொள்கை அம்சங்கள் இருக்கவேண்டும் என்பதுதான் திரா விட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையா கும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூல்கள் வெளியீட்டு விழா

5.3.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் இயக்க நூல்களை வெளியிட்டு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

நடந்துகொண்டிருக்கின்ற ‘‘முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள் - எண்டிசையும் புகழ்பரப் பும் அண்ணாவின் எட்டு உரைகள்'' என்ற நூலை யும்,  மேலும் நான்கு நூல்களினதும் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கும்,  நம்முடையசெங்கல் மாரி கருணாநிதி'  அவர்கள் ‘‘தொடக்கம்'' திரைப்படப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்து நடை பெறுகின்ற நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக் கக் கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இங்கே வெளியிடப்பட்ட நூலைப்பற்றி அரு மையான நினைவுகளோடு  கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே,

மிக அருமையாக இந்த நூலை ஆய்வு செய்து, பல பகுதிகளைச் சுட்டிக்காட்டி எடுத்துரைத்த அருமைத் தோழர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக இணைப்புரை வழங் கிக் கொண்டிருக்கக்கூடிய  மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, வரவேற்புரையாற்றிய வழக்குரைஞர் மதிவ தினி அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய வழக்குரைஞர் மணியம்மை அவர்களே,

கழகப் பொருளாளர் மானமிகு குமரேசன் அவர்களே, இந்நூலைப் பெற்றுக்கொண்ட பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களே,

பெரியார் நூலக பதிப்பகத்தின் மேலாளர் அருமை சகோதரர் டிகே.நடராசன் அவர்களே,

நூல்களைப் பெற்றுக்கொண்ட அருமைப் பகுத் தறிவாளர்களே, நண்பர்களே இங்கே குழுமியுள்ள தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கம்' திரைப்படத்தின்

பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீடு

இங்கே ‘‘தொடக்கம்'' திரைப்படத்தின் பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது. அந்தத் திரைப்படத் தில் ஆழமான கருத்துகளை எடுத்து வைத்திருக் கிறார்கள் என்ற  குறிப்பை என்னிடம் சொன்னார்கள்.

படத்தைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு  இல்லாத காரணத்தினால், கரோனா காலகட்டம் என்பதால்,  இந்நிகழ்ச்சி தள்ளிப் போய்விட்ட காரணத்தினால், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்திவிடவேண்டும் என்ற முயற்சி எடுத்து சிறப் பான வகையில் செய்திருக்கிறார்கள்.  நம்முடைய தோழர்கள்மூலமாக அதனைத் தெரிந்துகொண் டேன்.

நம்முடைய நிதிதா திரைக்களம்  செங்கல் மாரி கருணாநிதி அவர்கள் அருமையாக செய்திருக் கிறார். தமிழ்நாட்டில் இன்றைக்கு முதன்மைச் சிக்கலாக இருக்கக்கூடிய சிக்கல்களானநீட்' நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை, தமிழ்ப் பெயர்களை தமிழ்க் குழந்தைக ளுக்கு சூட்டாத ஒரு கொடுமை, ஜாதி மறுப்புத் திரு மணத்தினுடைய சிறப்பு, உயர் கல்வி நிறுவனங் களில் பாதிக்கக்கூடிய மாணவர்கள், அறிவாசான் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகி யோருடைய தத்துவக் கோட்பாட்டில் இந்தச் சமூகத்தின் நகர்வு இருந்தால், எப்படி சிறப்பாக இருக்கும் - திராவிடம் புரிந்த சாதனைகள் என்ன என்கிற கருத்துகளோடு ‘‘தொடக்கம்'' திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கவிஞர் மாரி கருணாநிதி

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் ஆகியவற்றை மக்கள் கவிஞர் மாரி கருணாநிதி செய்துள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசை ஆதிஇந்திர வர்மன், ஒளிப்பதிவு உமாநாத், படத்தொகுப்பு சிறீதர், ஸ்டெண்ட் இளங்கோ, பின்னணி குரல் மதிவதினி, பாடகர் சுந்தர் அய்யார் - முதன்மை நடிகர்கள் மாதேஸ், மாரி கருணாநிதி, சித்து, இனி யவன், ஊமை.ஜெயராமன், சி.கே.செந்தில்குமார், கனிஷ்கா, ஹேமா, ஜீவிதா ஆகியோர் நடித்திருக் கிறார்கள்.

திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!

நம்முடைய இயக்கத் தோழர்கள் மிகுந்த கொள்கை உணர்வோடு இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அத்திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறோம் - விரும்பு கிறோம் - நூல் வெளியீட்டோடு இந்த நிகழ்ச்சியை யும் இணைத்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணாவின் புத்தகம் வெளியிடுகின்ற நேரத்தில், இதுபோன்ற ஒரு திரைப்படம் இன்றைய  தலைமுறையினர் எடுத்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அது மிக அதிசயமான ஒன்று. பொருத்தமானதும்கூட!

அண்ணாவினுடைய ‘‘வேலைக்காரி'' திரைப் படம் வெளிவந்தபொழுது, அந்தத் திரைப்படத்தின்  கதை - வசனம் அறிஞர் சி.என்.அண்ணாதுரை எம்..,' என்று டைட்டில் வரும் - அதைப் பார்த்து நாங்கள் எல்லோரும் கைதட்டுவோம் - அரங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கைதட்டுவார்கள். அடைய முடியாததை அடைந்ததைப்போல, அந்தக் காலத்தில் ஒரு மிக முக்கியமான சாத னையை செய்தவர் அறிஞர் அண்ணா அவர்கள்! இளைஞர்களாகிய எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!

‘‘வேலைக்காரி'' திரைப்படமாக வெளிவருவ தற்கு  முன்பு, நாடகமாக நடந்தபொழுது தஞ்சையில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் நடத்தினார்கள். அதையும் நாங்கள் பார்த்திருக் கிறோம். அது திரைப்படமாக வந்தபொழுது, அண்ணாவினுடைய பெயர் முதன்முதலாக திரையில் பார்க்கும்பொழுது அவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கும். நான் பல ஊர்களில் கூட்டம் முடிந்ததும் வேலைக்காரி திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். நாகர்கோவில் உள்பட, 16 முறை  - 16 ஊர்களில் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, அண்ணாவினுடைய ‘‘வேலைக்காரி'' திரைப்படத்தின் வசனங்களை நான் மனப்பாடமாக சொல்வேன். ஏனென்றால், திரும்பத் திரும்ப அந்த வசனங்களைக் கேட்டதால்.

"மகள் ஓர் அகம்பாவி; மகன் ஓர் அப்பாவி" என்பார் அண்ணா அந்தத் திரைப்படத்தில். இது அந்தக் காலத்தில்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பெரியார் திடலில் பாராட்டியிருக்கிறோம்!

இன்றைக்கு ஒரு திரைப்படத்தை நம்முடைய தோழர்கள் இயக்கக் கூடிய அளவிற்கு வந்திருக் கிறது. பல முற்போக்குச் சிந்தனையாளர்களான திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களை பெரியார் திடலுக்கு அழைத்து  அவர்களைப் பாராட்டுகிறோம்.

காரணம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் திரைப்படத் துறையிலும் ஏராளம் வந்துவிட்டார்கள். இன்னுங்கேட்டால், திரைப்படத்தில், நம்மவர்களு டைய கருத்துகள்தான் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு இருக்கின்றன.

அக்காலத்தில்மருதநாட்டு இளவரசி' என்ற திரைப்படத்தில், கதை வசனம், இயக்கம் .எஸ்.எஸ்.சாமி பி..ஆனர்ஸ் என்று போடுவார்கள். அதற்கடுத்து உதவி மு.கருணாநிதி என்று வரும் பொழுது, நாங்கள் எல்லாம் கைதட்டுவோம். அதற் குப் பிறகுதான்பராசக்தி' திரைப்படம் வந்தது. முதலில் பாவலர் பாலசுந்தரம் எழுதி பல வாரங்கள் நாடகங்களாக சக்தி நாடக சபாவில் ஓடியது!

ஆகவேதான், ஒரு பெரிய அளவிற்கு இன் றைக்குத் திரைப்படங்கள் மூலமாக மிகப்பெரிய அளவிற்கு முற்போக்குக் கருத்துகள் வந்திருக் கின்றன.

திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கை

ஆனால், ஒன்று திரைப்படங்கள் பொழுது போக்கிற்காக வருகின்ற நேரத்தில், அதிலும் சிறப் பான வகையில் கொள்கை அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தினு டைய அடிப்படை கொள்கையாகும்.

புரட்சிக்கவிஞர் அவர்களின் பாடல்களானாலும், உடுமலை நாராயணகவி அவர்களின் பாடல்களா னாலும், அதற்கு முன்பு நகைச்சுவை அரசரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவையானாலும், நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகங்களானாலும் கலைத் துறையின் மூலமாக மிகப்பெரிய அளவிற்குப் பயன் உண்டாக்கினார்கள். அண்ணா அவர்களே எழுதி நடித்த முதல் நாடகம்தான் ‘‘சந்திரோதயம்'', அதற்கடுத்து ‘‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்'' நாடகமாகும். பிறகு தான் மற்ற நாடகங்கள், திரைப்படங்கள்.

இங்கே வெளியிடப்பட்ட  ‘‘முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள் - எண்டிசையும் புகழ் பரப்பும் அண்ணாவின் எட்டு உரைகள்''  நூல் ஒரு வரலாற்று ஆவணம். இந்த நூலை நான் எந்த நோக்கத்தோடு தொகுத்தேனோ அந்த நோக்கம் - நம்முடைய அருள்மொழி அவர்களின் உரையின்மூலம் மிகத் தெளிவாக வெளியாயிற்று. அதைக் கேட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்த தலைமுறையினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்புகிறார்கள்!

இந்நூலின் ஒரு பகுதியை எடுத்துக்காட்டினார்.

1937 இல் அறிஞர் அண்ணா அவர்கள் இளைஞர். அவரை மாநாட்டிற்குத் தலைமை தாங்கச் சொல் கிறார் தந்தை பெரியார்.

சில பேர் தவறான தகவல்களைப் பரப்புவார்கள்; "பெரியாருக்கு இளைஞர்களைப் பிடிக்காது; பெரியார் யாரையும் தூக்கி விடமாட்டார்; பெரியார் எல்லோரையும் அழுத்திக் கொண்டே இருப்பார்" என்றெல்லாம் ஆதாரமில்லாத செய்திகளை சிலர் திட்டமிட்டே பரப்புகிறார்கள்.

பெரியாருக்கு இளைஞரைப் பிடிக்காது என்றால், நாங்கள் எல்லாம் மேடைக்கே வந்திருக்க முடியாது. அதற்கு நானே அடையாளம். அவரு டைய வயதிற்கும் - என்னுடைய வயதிற்கும் எவ் வளவு இடைவெளி? அண்ணாவினுடைய வயதிற் கும், பெரியாருடைய வயதிற்கும் 30 ஆண்டுகள் இடைவெளி!

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தது 1926 இல். அதிகாரப்பூர்வமாக இந்தத் தேதியில் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம் என்று ஆரம்பிக்கவில்லை. குடிஅரசு ஆரம்பித்த நாளிலிருந்து அப்படியே  அந்த இயக்கம் வந்தாயிற்று.

கட்சி' என்பதற்கு ஒரு தொடக்க விழா இருக் கலாம்; மூவ்மெண்ட் இயக்கம் - என்பதற்கு தொடக்க விழா என்று ஒரு தேதியை சொல்ல முடியாது.

இயக்கத்திற்கும் - கட்சிக்கும் என்னென்ன வேறுபாடுகள் என்று யாராவது கேட்டால்,

ஒரு கட்சிக்குத் தொடக்க நாள் உண்டு; முடிவு நாளும் உண்டு. காங்கிரசை காந்தியாரே  கலைக்கச் சொல்லவில்லையா?

ஆனால், ‘இயக்கம்' என்பதற்கு தொடக்க விழா என்பது கிடையாது; என்றைக்குக் கொள்கைத் தொடங்குகிறதோ - என்றைக்கு அந்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அது இயக்கம்தான். அது என்றைக்கு என்று சொல்ல முடியுமா?

சுயமரியாதை இயக்கம் எந்தக் காலத்தில் தொடங்கியது என்று என்னை கேட்டால், நான் திடீரென்று குண்டைத் தூக்கிப் போடுவதுபோன்று ஒரு செய்தியை உங்களிடம் சொல்லலாம்; 1908 இல் வந்தது என்று!

1908 என்று ஆசிரியர் இப்படி பொய் சொல் கிறாரே' என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்.

நாம் என்ன பா...விலா சேர்ந்துவிட்டோம்?  நளினமாகப் பொய் சொல்வதற்காகவே ஒரு கூட்டத்தை  அவர்கள் வைத்திருக்கிறார்கள். ‘ட்ரால்ஸ்' (Trolls) என்று அந்தக் கூட்டத்திற்குப் பெயர். பொய்யைப் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

மரண வாக்குமூலம் சொல்கின்றவர் யாரும், உண்மையைத்தான் சொல்வார்கள்!

அதுபோன்ற கூட்டமல்ல நாம்; நாமெல்லாம் பெரியாருடைய தொண்டர்கள். அய்யா என்ன சொன்னார், ‘‘நான் சொல்வதெல்லாம் மரண வாக்குமூலம்; மரண வாக்குமூலம் சொல்கின்றவர் யாரும், உண்மையைத்தான் சொல்வார்கள்.'' என்றார்.

ஆகவேதான், சாட்சியத்தில், மரண வாக்கு மூலத்தை      தக்க ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள்.

அய்யா அதை மிக அழகாகச் சொல்வார், ‘‘நான் பொய் சொல்ல முடியாது; ஏனென்று கேட்டால், உண்மையைச் சொல்வதற்கே நேரம் போத வில்லை; பிறகு நான் எப்படி பொய் சொல்வேன்'' என்று சொல்வார்.

உண்மையை உள்வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கம்!

ஆகவே, மிகப்பெரிய அளவிற்கு, உண்மையை உள்வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கம் இது.

1908இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பட்டது என்று நான் ஏன் சொல்கிறேன்? தன்னுடைய தங்கை மகளான சிறு குழந்தைக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்; அந்தக் குழந்தை பால்ய விதவையான நிலையில், அந்தக் குழந்தை பெரியாரின் காலைக் கட்டிக்கொண்டு அழுகின்ற காட்சியை நீங்களெல்லாம் ‘‘பெரியார்'' திரைப் படத்தில் பார்த்திருப்பீர்கள்.

அப்பொழுது மிக முக்கியமான ஒரு கருத்து, ‘‘மாமா, இதுபோன்ற ஒரு திருமணத்தை நான் கேட்டேனா?'' என்று சொல்லக்கூடிய உணர்ச்சிபூர் வமான காட்சியாக அந்தக் காட்சி இருக்கும்.

அவர்கள் அவர்களின் ‘‘பெண் ஏன் அடிமை யானாள்?'' என்ற நூலில் அந்த சம்பவத்தைப்பற்றி எழுதியிருப்பதைப் படித்தோமானால், நம்முடைய கண்களில் கண்ணீர் வரும்.

"நான் அதைத் தூக்கி நிறுத்தும்பொழுதே, அதற்கு மறுவாழ்வு, புதுவாழ்வு கொடுப்பேன் என்ற உறுதியோடு தூக்கி நிறுத்தினேன்" எப்பொழுது 1908 ஆம் ஆண்டு!

அப்படி என்றால், சுயமரியாதை இயக்கம் எப்பொழுது தோன்றியது என்றால், 1908 ஆம் ஆண்டு என்று ஏன் சொல்லக்கூடாது? கொள்கை - சாதனை இரண்டும் நடந்ததே!

சுயமரியாதை இயக்கம் என்பது பெரியாரோடு இணைந்த ஒன்றாகும். பெரியார்தான் உருவாக் கினார். பெரியாருடைய ஒவ்வொரு செயலும், சுயமரியாதை இயக்கத்தினுடைய வித்துக்கள். ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்தன.

பெரியார் ஒரு சுயசிந்தனையாளர்

பெரியார்படிக்கவில்லை' - அவருடைய அனுபவத்தில் பார்த்தார். ஏனென்றால், பெரியார் ஒரு சுயசிந்தனையாளர். அந்தக் கருத்து மிகப் புதுமையான கருத்து.

ஆகவே, ஒரு இயக்கம் என்று சொன்னால், இந்தத் தேதியில்தான் தொடங்கப்பட்டது என்று சொல்ல முடியாது. தனி மனிதர்களுக்கு பிறப்பு - இறப்பு உண்டு. 

பெரியார்' உருவப் படத்திற்குக் கீழே பிறப்பு 17.09.1879 என்று போடக் கூடாது. இது யாருக்குப் பொருந்தும் என்றால், .வெ.ராமசாமிக்குப் பொருந்தும்.

.வெ.ராமசாமி என்ற மனிதர் 1879 இல் பிறந்து, 1973 இல் இறந்தார்.

ஆனால், பெரியார் என்ற தத்துவத்திற்கு மறைவு கிடையாது. அதற்கு நீங்கள் காலம் போட முடியாது. திருவள்ளுவருக்குக் காலம் உண்டா? புத்தருக்குக் காலம் உண்டா?

புத்தர் வரலாற்றில் 80 வயதில் இறந்தார் என்று சொல்கிறார்கள்; யார் இறந்தார்? சித்தார்த்தர் இறந்தார்; அவருடைய உடல் இறந்தது; ஆனால், தத்துவம் கொல்லப்பட்டது; விரட்டப்பட்டது. ஆனால், அது பெரியாரிடம் நடக்காது. புத்தர் இன்றும் வாழ்கிறார்!

முசிறி தாலுகா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு துறையூரில் 22.08.1937அன்று நடைபெற்றது. மாநாட் டின் தலைவர் அறிஞர் அண்ணா. அவர் இயக்கத்திற்கு வந்த சமீபகாலத்திலேயே மாநாட்டுத் தலைவர் எனும் பெரும் பொறுப்பை நல்கினார் தந்தை பெரியார். 

(தொடரும்)

Comments