ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·             கருத்துரிமையைப் பறிக்கும் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. அண்மையில் .பி. நீதிமன்றம் தாண்டவ் சினிமா தொடர்பாக மத உணர்வுகளை விமர்சிப்பது தவறு என்று தீர்ப்பளித்ததும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என அரசியல் விமர்சகர் பிரவீன் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             ராமன் கோவில் கட்டுவது இந்தியாவை மேலும் வலுவுள்ள தாக்கும் என பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் தீர்மானம்.

·             தமிழகம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் பிறந்த மண். இங்கே பாஜகவின் தந்திரங்கள் பலிக்காது என தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேச்சு.

·             மத்தியில் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து அமைந்த ஆட்சிக் காலத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து செயலாற்றும் அரசுகள் அமைந்துள்ளன என காங்கிரஸ் கட்சித் தலைவர் .சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             வேளாண் சட்டங்கள் ரத்து ஆகும் வரை தொடர்ந்து போராடுவோம் என கருநாடக விவசாயிகள் பேரணியில் பாரதீய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் சூளுரை.

தி டெலிகிராப்:

·             ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக, பிரதமர் மோடிக்கு நெருக்கமான கருநாடகவைச் சேர்ந்த தத்தாத்ரே கவுபோலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·             பிரதமர் மோடி துவங்கிய பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பலரையும் மிரட்டி பணம் சேர்க்கப்படுகிறது. அந்த நிதியெல்லாம்  என்ன ஆனது என மோடி விளக்குவாரா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா, தான் மிரட்டி பணம் சேர்ப்பதாக மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- குடந்தை கருணா

21.3.2021

Comments