ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     எத்தகைய மாற்றத்தை பாஜக கொண்டு வர விரும்புகிறது என்பதைப் பற்றி அக்கட்சி என்றைக்குமே தெளிவாக குறிப்பிட்டது இல்லை என மூத்த பத்திரிகையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டு உள்ளார்.

·     பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பின்னர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த வழக்கில் நீதிமன்றம் கவனமாக அணுக வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     ஊடக சுதந்திரம் குறித்து மத்திய அமைச்சரவைக்குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

·     பீகாரில் வேளாண் சந்தையை அகற்றியதால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்பட்டுள்ளது. அரசின் ஆதரவு மட்டுமே விவசாயிக ளுக்கு நன்மை அளிக்கும் என பேராசிரியர்கள் கிறிஸ்டபி ஜாப்ரலெட் - ஹேமல் தாக்கர் தங்களது கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.

·     இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் ஆணை என மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் வாதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பாஜகவை உதைத்து விரட்ட எனது ஒரு கால் மட்டுமே போதும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்.

·     விவசாயம் குறித்து அய்க்கிய நாடுகளுடன் இந்தியா கையெ ழுத்திட்டதற்கு மாறாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரதமர் மோடிக்கு அளித்த மனுவில் விவசாய அமைப் பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா குறிப்பிட்டுள்ளது.

தி இந்து:

·     இந்திய மேலாண்மைக் கழகத்தின் ஆசிரியர் பணியிடங்களில் 60 சதவீத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்க்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் போக்ரியால் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·     விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து உரிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மத்திய அரசு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் என மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

· மோடி அரசுக்கு எதனையும் உருவாக்க தெரியாது. அரசின் நிறு வனங்களை விற்க மட்டுமே தெரியும் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அச்சட்டத்தை எதிர்ப்போம் என தெரிவித்திருப்பது, கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- குடந்தை கருணா

16.3.2021

Comments