சொன்னார்களே செய்தார்களா?


 2016ஆம் ஆண்டு ...தி.மு.. தேர்தல் அறிக்கை (பக்கம் 9) என்ன கூறுகிறது?

"வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று கூறப் பட்டுள்ளதே - அதனைச் செய்திருக்கிறதா ...தி.மு.. அரசு?

இதைச் செய்ய வக்கற்ற ...தி.மு.. இப்பொழுது வெளியிட்டுள்ள ...தி.மு.. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27).

அனைவருக்கும் வீடு "அம்மா இல்லத் திட்டம்" என்ற தலைப்பில் -

"குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, கிராமப்புறங் களில் அரசே இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நகர்ப்பகுதிகளில் அரசே இடம் வாங்கி அடுக்கு மாடி வீடுகள் கட்டி அம்மா இல்ல திட்டம்" மூலமாக விலையில்லாமல் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளதே.

2016ஆம் ஆண்டு ...தி.மு.. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட  வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் அளிக்கப்படும் என்ற திட்டத்தையே நிறைவேற்றாத ...தி.மு.. அரசு கான்கிரீட்டில் வீடு கட்டிக் கொடுப்பார்களாம்; கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி 'வைகுண்டத்தைக்' காட்டுகிறேன் என்றானாம் அதுதான் நினைவிற்கு வருகிறது.

தேர்தலில் இவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்!

வாக்களிப்பீர்

தி.மு.. கூட்டணிக்கே!

Comments