அதிசயம் - ஆனால் உண்மை தேசிய அளவில் ‘கேட்’ தேர்வில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாதனை

பெங்களூரு, மார்ச் 28 தேசிய அளவில்கேட்தேர்வில் ஆட்டோ ஓட்டு நரின் மகன் 5ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள் ளார்.

தேசிய அளவில்

5ஆம் இடம்

தொழில்நுட்ப கல்லூரி களில் எம்.டெக், எம்.., பி.எச்.டி. போன்ற மேற்படிப்பு களில் சேர இந்தியாவில் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு என்கிறகேட்நுழைவுத்தேர்வு நடத்தப் பட்டு வருகிறது. அதுபோல் சமீபத்தில்கேட்நுழைவுத் தேர்வு நடந்தது. நாடு முழு வதும் 9.5 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

 இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 17.82 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தகேட்   தேர்வில் கருநாடகத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் தேசிய அளவில் 5ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் மகன்

அதாவது, கருநாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா உல்லூரு கிராமத்தை சேர்ந் தவர் அபிஷேக். இவரது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். அபிஷேக் தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளியிலும், பி.யூ.சி. படிப்பை கன்னட மொழியிலும் முடித் துள்ளார். பின்னர் அவர் மைசூருவில் உள்ள என்.அய். .எஸ். கல்லூரியில் மெக்கா னிக்கல் பொறியியல் முடித் தார்.

இதையடுத்து அவர் மேற்படிப்பு படிக்ககேட்தேர்வு எழுத முடிவு செய்தார். கடந்த ஆண்டு நடந்தகேட்தேர்வில் அவர் 789 இடத்தை பிடித்தார்.

இருப்பினும்அவர் சோர்ந்து போகவில்லை. தற்போது நடந்த கேட் தேர்வுக்காக தீவிரமாக படித் தார். மேலும் தேர்வை சிறப் பாக எழுதி முடித்தார். இதன் பலனாக தற்போது அவர்கேட்தேர்வில் தேசிய அளவில் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

அரசு வேலையில்...

  இதுகுறித்து அபிஷேக் கூறுகையில், கரோனா ஊரடங்கு காரணமாககேட்தேர்வுக்கு தயாராக நேரம் கிடைத்தது. இணையதள வகுப்பு மூலம் தேர்வுக்கு தயா ராகி வந்தேன். நான் கடந்த முறை எழுதியகேட்தேர்வில் சரியாக தேர்ச்சி ஆகவில்லை. இதனால் மீண்டும் கேட் தேர்வு எழுதி 5ஆம் இடத்தை பிடித்துள்ளேன். ஏதாவது ஒரு அரசு மெக்கானிக்கல் பொறியியல் வேலையில் சேரு வதே எனது லட்சியம் என்றார்.

Comments