கிருஷ்ணகிரியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்துதிராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருட்டினகிரி, மார்ச் 9-  கிருட்டினகிரி காட்டநாயனப்பள்ளியில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாலைமறியல் போராட்டம் நடை பெற்றது.

கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி காட்டி நாயனப் பள்ளி பெரியார் நினைவு சமத்துவ புரத்திலுள்ள தந்தைபெரியார் சிலைக்கு 07.03.2021 விடியற் காலையில் அடையாளம் தெரி யாத நபர்கள் டயரால்தீவைத்து உள்ளனர். செய்தி அறிந்து கழகத் தோழர்கள் திரண் டனர்.

கிருட்டினகிரி காட்டிநாயனப்பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திராவிடர் கழகம், தி.மு.., வி.சி.., ..., எஸ்.டி.பி.அய்., காங்கிரஸ் , சி.பி.அய்.(எம்), மற்றும் பலவேறு அமைப்புகளின் தோழர் கள் பெரும் திராளாக கிருட்டினகிரி - குப்பம் சாலையிலுள்ள காட்டி நாயனப் பள்ளி பெரியார் நினைவு சமத்து வபுரம் பெரியார் சிலை முன்பு கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் . அறிவரசன் தலை மையில் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அனைத்து கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட் டம் மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண் டனர்.

உடனடியாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவ ணன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தலை மையில் தந்தை பெரியார் சிலைக்கு வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக் கப்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.

Comments