ஆதித்தமிழர் பேரவை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

 தி.மு.. கூட்டணியில் தேர்தல் உடன்பாடு

சென்னை, மார்ச் 10- சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக கூட் டணியில் ஆதித்தமிழர் பேரவை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களும் - ஆதித் தமிழர் பேரவை கட்சியின் நிறுவனர் / தலைவர் இரா.அதியமான் அவர்களும் 8.3.2021 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், ஆதித்தமிழர் பேரவை, தமிழகத்தில்   1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வ தெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய் யப்பட்டது.  இந்த பேச்சு வார்த்தையின்போது ஆதித்தமிழர் பேரவை கட்சியின் பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், மாநில அமைப் புச் செயலாளர் .முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்களும், 8.3.2021 அன்று  தொகுதி உடன் பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ கத்தில்   1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வ தெனவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவ தெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் .கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் வேணுகோபால்  ஆகியோர் உடனி ருந்தனர்.

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அவர்களும் - மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனர்/தலைவர் சு..முருகவேல் ராஜன் அவர்களும், 8.3.2021 அன்று  தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மக்கள் விடுதலை கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்ட மன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள் வதெனவும், உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப் பட்டது. இந்த பேச்சு வார்த்தையின் போது மக்கள் விடுதலை கட்சியின் மாநில செயல்தலைவர் .அபிசு ரேஷ், மாநில பொதுச்செயலாளர்கள் .இரவி, இரா.செல்வகுமார், மாநில அமைப்புச் செயலாளர் மு.சரவண குமார்  ஆகியோர் உட னிருந்தனர்.

Comments