அஞ்சல் மூலம் வேண்டாம் - வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க வேண்டும் : மாற்றுத் திறனாளிகள் சங்கம் அறிவுறுத்தல்

 சென்னை, மார்ச் 15 தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: தமி ழகத்தில் சுமார் 25 லட்சத் திற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள் ளனர். இவர்கள் அஞ்சல் ஓட்டுப் போட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்ததையொட்டி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை அஞ்சல் ஓட்டு போடவேண்டும் என அதிகாரிகள் கண்டிப்புடன் வற்புறுத்தி வருகின்றனர். இது சுதந்திரமாக வாக்களிப்பதற்கு எதிரான செயலாகும். அப்படியே அஞ்சல் ஓட்டு மூலம் வாக்களித் தாலும் அந்த அஞ்சல் வாக்கினை முறைப்படி எண்ணுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள் ளது.

எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக் காளர்கள் சற்றும் சிரமத்தை பாராமலும், வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி உதவி யாளருடன் சென்று வாக்களிக்கவும், ‘வீல் சேரில்சென்று வாக்களிக்கவும், தமிழ்நாடு மாற்றுத்திற னாளிகள் முன்னேற்றச் சங் கத்தின் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர முன் வந்துள்ளனர்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி களும் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக் குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விவரங் களுக்கு செல் 79046 64569 / 94444 30010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Comments