ஆசிரியருக்குக் கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எனும் ஊரில் நடைபெற்று உள்ள சம்பவம் மனிதநேயம் கொண்டவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பெற்ற தந்தையே தனது அய்ந்து வயது மகனை தீ வைத்து கொலை செய்து உள்ளார் என்பது மனதை நடுங்க வைக்கிறது. இந்த செயலை செய்வ தற்கு தூண்டு கோலாக துணை நின்றது எது வென்றால் ஜோதிடம்மகனால் உயிருக்கு ஆபத்து என்று தந்தையிடம் ஜோதிடர் ஒரு வர் கூறி உள்ளார்.

அதனால் தந்தை மகனை கொலை செய்து உள்ளார் என்பது மூடநம்பிக்கையின் உச்சம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை ராம்கி என்பவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும். இனி வேறொரு குழந்தைக்கு இது போன்ற கொடூரமான செயல் நடைபெறக் கூடாது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னால் அறிந்தவர் "தீர்க்கதரிசி" தந்தை பெரியார். அதனால் தான் ஜோதிடத்தை நம்ப வேண் டாம் என்று சொன்னார். ஜோதிடர்கள் மக் களை ஒற்றுமையுடன் வாழ வழி சொல் வார்கள் என்று பார்த்தால் ஒரு பிஞ்சின் உயிரை எடுக்க வைத்து உள்ளார்கள். இது கண்டனத்திற்கு உரியதாகும். திருவாரூர் என்பது திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு ஆதரவான ஊர். ஆனால் இங்கு இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது என்றால் மனவேதனையை ஏற்படுத்துகிறது. பெரியாரின் கொள்கைகளை சிறுவர் முதல் பெரியவர் வரை அறியச் செய்யும் வண்ணம் நாம் விரைவாகச் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

- .உதயபாரதி, கெருகம்பாக்கம்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image