பிறந்த நாளில் பெரியார் - அண்ணா - கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகின்ற தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்து வெற்றியை இங்கே காணிக்கை ஆக்குவார்!

செய்தியாளர்களிடம்தமிழர் தலைவர்

சென்னை, மார்ச் 2 தன்னுடைய பிறந்த நாளான இன்றைக்கு தந்தை பெரியார் நினைவிடத்தில், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைக்கின்ற இதே தளபதி ஸ்டாலின் அவர்கள், இன்னும் இரண்டு மாதங்களில் முதல்வராக வந்து மலர்வளையம் வைப்பார். வெற்றியை இங்கே காணிக்கையாக ஆக்குவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று (1.3.2021) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். அப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

ஆரியத்தால் வெல்லலாம் என்று நினைத்தால் - அதனை திராவிடத்தால் நாங்கள் முறியடிப்போம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவராகவும், ஓர் எடுத்துக்காட்டான எதிர்க் கட்சித் தலைவராகவும் பணியாற்றிவரும், தொண்டாற்றி வரும் அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு 68 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார்.

68 ஆம் அகவையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, அவருக்குப் பல அறைகூவல்கள் காத் திருக்கின்றன என்பதை ஏற்று, ஆரியத்தால், இந்தத் தமிழ்நாட்டை அடிமைப்படுத்திவிட முடியும்  - சில அடிமைகளுடைய உதவியோடு என்கிற எண் ணத்தில் இருக்காதீர்கள். நீங்கள் ஆரியத்தால் வெல்லலாம் என்று நினைத்தால், திராவிடத்தால் நாங்கள் உங்களை முறியடிப்போம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு முழங்கிய தளபதி - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடைய வழியில் உறுதியாக நடைபோடுகிறார் என்று பொருள்.

கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாடு சூறை யாடப்பட்டு இருக்கிறது - தமிழ்நாட்டினுடைய மானம் அடகு வைக்கப்பட்டு இருக்கிறது. உரி மைகள் பறிபோயிருக்கின்றன. தமிழ் வேஷம் கட்டிக்கொண்டு, வடக்கே இருந்து வரக் கூடிய வர்களுக்கு ஏதோ தமிழ்மீது பெரிய பற்று இருப்பது போல, ஒப்பனைகளை செய்து பேசிக் கொண்டி ருக்கின்றார்கள்.

அவர்களுடைய உண்மை உருவம் வேறு; உதட்டிலிருந்து பேசுகின்ற பேச்சு  வேறு!

செம்மொழி தமிழ் மொழிக்கு இவர்கள் செய்தது என்ன? என்பது தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரின் உள்ளத்திலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, நம்முடைய நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் கடிதம் அனுப் பினார்கள் என்று சொல்கின்றபொழுது, அவர்களு டைய உண்மை உருவம் வேறு; உதட்டிலிருந்து பேசுகின்ற பேச்சு வேறு என்பது தெள்ளத் தெளி வாகி விட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஓர் அறிக்கை!

காரணம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஓர் அறிக்கை கொடுத்திருக் கிறார்கள். அந்த அறிக்கையில்,

தமிழ்நாட்டில் நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், தமிழின உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. காரணம், இது பெரியார் பூமி - சமூகநீதி பூமி. ஆகவே, ‘தமிழ், தமிழ்' என்று சொல்லிக் கொண்டே இருங்கள்- யாராவது ஏமாறுகிறார்களா பார்க்கலாம் என்று - தமிழ் அடையாளம் என்ற ஒன்றைக் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அதன் காரணமாகத்தான் பிரதமர் மோடியாக இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாக இருந்தாலும், வடக்கே இருந்து வருகின்றவர்களுக்கு திடீரென்று தமிழ்ப் பற்று இப்பொழுது பீறிட்டு அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் படிக்கவில்லையே என்றெல்லாம் சொல்கிறார்கள்.

நீங்கள் தமிழ் மொழியைக் கற்கிறீர்களோ இல் லையோ - எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு நீங்கள் அனுமதிக் கிறீர்களா? என்பதுதான் இப்பொழுது இருக்கின்ற கேள்வி.

ஆகவேதான், இதற்கெல்லாம் விடை காணு கின்ற நாள்தான் ஏப்ரல் 6. அன்று தெளிவான எண் ணத்தோடு மக்கள் நல்ல முடிவைக் கொடுப்பார்கள். மக்கள் ஆயத்தமாகி விட்டார்கள்.

கொள்கைக் கூட்டணி வெல்லும்!

எனவேதான், கொள்கைக் கூட்டணி வெல்லும் - திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் தலைமையில் உள்ள கூட்டணியை அசைக்க முடியாத அளவிற்கு - மக்கள் நலக் கூட்டணியாக - மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கூட்டணியாக - மதச்சார்பின்மையைக் காப்பாற்றுகின்ற கூட் டணியாக - ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடிக்கக்கூடிய கூட்டணியாக அது நின்று கொண்டிருக்கின்ற காரணத்தால், வென்று - வாகை சூடும்.

தளபதி அவர்கள் தன்னுடைய பிறந்த நாளான இன்றைக்கு தந்தை பெரியார் நினைவிடத்தில், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைக்கின்ற இதே தளபதி ஸ்டாலின் அவர்கள், இன்னும் இரண்டு மாதங்களில் முதல் வராக வந்து மலர்வளையம் வைப்பார். வெற்றியை இங்கே காணிக்கையாக ஆக்குவார். அந்த நாளை நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

வாழ்க தளபதி ஸ்டாலின்! வருக அவர் கண்ட புதிய சமுதாயம்!!

திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! உறுதியாக திராவிடம் வெல்லும்!!!

ஆட்சிக்கு வரப் போவதில்லை  என்று தெரிந்துதான்

சொல்லியிருக்கிறார்கள்

செய்தியாளர்: பா... - பா... - .தி.மு..வி னுடைய கூட்ட ணியை எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை வன்னியர் சமுதா யத்திற்குக் கொடுத்ததும்; அதனை  பா... நிறு வனர் டாக்டர் இராமதாஸ் வரவேற்று, நிச்சயம் .தி.மு..வை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. அதனுடைய விழுமிய பலன் இப்பொழுது கிடைக்கப் போவதில்லை.  இதுவரையில் தற்காலிக இட ஒதுக்கீடு என்று எந்த ஒதுக்கீடும் வந்ததே கிடையாது.

இட ஒதுக்கீடு என்று சொன்னாலே நிரந்தரம் தான். ஆனால்,  இந்த இட ஒதுக்கீடு ஆறு மாதத்திற் குள்ளேதான் இருக்கும் என்று சொன்னால், ஆறு மாதத்திற்குப் பிறகு இவர்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை  என்று தெரிந்துதான் சொல்லி யிருக்கிறார்கள்.

வண்டிக்கு முன்பு குதிரையைக் கட்டுவதா? அல்லது வண்டிக்குப் பின்பு குதிரை இருப்பதா? என்பதுதான் மிகவும் முக்கியம்.

அப்படி பார்க்கின்றபொழுது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பார்த்து, அதில் அனைத்து பிரிவினர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.

எனவேதான், இருசாராருக்குமே தெரியும் - இது ஒரு தேர்தல் யுக்தியே தவிர, இது சமுதாயப் புரட்சி அல்ல என்று.

அது விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

செய்தியாளர்: தமிழ்த் தேசியம் பேசியவர்கள் எல்லாம் பா...வுடன் கூட்டணி வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அவர்களுடைய அடை யாளம் இப்பொழுது தெளிவாகத் தெரிந்தது. காட்டி யமைக்காக நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments