மம்தா மீது திட்டமிட்டு தாக்குதல்?

 காவல்துறை உயர் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்

 புதுடில்லி. மார்ச் 17- மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நிகழ்ந் துள்ள காயங்கள், விபத்தி னால் ஏற்பட்டதா, எதிர்க் கட்சியினர் தாக்குதல் நடத்தி யதாலா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே, இந்த விபத்து நடைபெற் றுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், அவருக்கு பாதுகாப்பு வழங் கிய காவல்துறையின் உயர் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

நந்திகிராமில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு வழங்கப்பட்ட  பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகக் கூறி, காவல்துறை உயர் அதிகாரி, புர்பா மெடினிபூர் காவல்துறை கண்காணிப் பாளர் பிரவீன் பிரகாஷை தேர்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்தது.

இதைத்தொடர்ந்து,  மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான காவல்துறை சிறப்புப் பார்வையாளராக பஞ்சாபின் காவல்துறை மேனாள் தலைமை இயக்குநர் (புலனாய்வு) அனில் குமார் நியமக்கப்பட்டு உள்ளார். மேலும்,  விவேக் டியூப் தவிர, அனில்குமார் இரண்டாவது சிறப்புக் காவல்துறை பார் வையாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும் பிய மம்தா பானர்ஜி, சிலரால் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதில் மம்தாவின் காலில் எலும்பு முறிவு ஏற் பட்டது. மேலும் உடலின் பல இடங்களிலும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன.  மம்தா மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என குற்றம் சாட்டப்பட்டது.

இது சர்ச்சையான நிலை யில், அவர்மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க தலைமைச்செயலாளர், தேர் தல் ஆணையருக்கு இந்திய  தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.

அதன்படி, மாநில தேர்தல் ஆணையர், தலைமைச்செய லாளர் ஆகியோர், இது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறப்பு காவல்துறை பார்வை யாளர் விவேக் டியூப் மற்றும் பொது பார்வையாளர் அஜய் நாயக் ஆகியோரிடமும் அறிக்கை கோரப்பட்டது. அவர்களும், மம்தா மீதான தாக்குதல் குறித்து, அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில்,  தேர்தல் ஆணையத் தின் விதிமுறைகளின்படி நந்திகிராம் நிகழ்வுக்கு  மம்தா தரப்பில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும், அதனால், அவரது நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட வில்லை எனச் சுட்டிக்காட் டப்பட்டு உள்ளது. மேலும், மம்தாவுக்கு எதிராக திட்ட மிட்ட தாக்குதலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துறையினரின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட் டியுள்ள தேர்தல் ஆணையம், மம்தாவுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை உயர் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு தோல்விக்காக பிரவீன் பிரகாஷ் மீது வழக் குப் பதிவுசெய்யவும் உத்தர விட்டுள்ள தேர்தல் ஆணை யம், ஒரு பாதுகாப்பு இயக்கு நராக, இசட்+ பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்குப் பாது காப்பு வழங்க வேண்டிய முக் கிய கடமையிலிருந்து விவேக் பியூப் தவறிவிட்டதாக கூறி அவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.  மேலும் புதிய அதிகாரியை நியமித்தும்உத்தரவிட்டு உள்ளது.

Comments