‘திராவிடப் பொழில்’ - ஒரு வரலாற்றுப் பொன்னேடு

 நேற்றைய (12.3.2021) தொடர்ச்சி...

தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட முதலில் குரல் கொடுத்துப் போராடியவர் தந்தை பெரியார்

1956-இல் விருதுநகர் சங்கரலிங்கனார் தமிழ் நாட் டிற்குத்தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பட்டினிப் போர் நடத்தி உயிர் விட்டதையே சிலர் திரும்பத் திரும்பப் பேசி வருகின்றனர். ஆனால் சங்கரலிங்கனாருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தந்தை பெரியார் தமிழ் நாட்டிற்குத்தமிழ்நாடுஎன்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தும் வந்தவர் பெரியார் என்பதைப் பேரா, ,காளிமுத்து தரவுகளோடு எடுத்துக்காட்டுகிறார். அதனால் சென்னை மாநிலத்திற்குத்தமிழ்நாடுஎன்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்துப் போராடியவர் தந்தை பெரியார் என்பது தெளிவாகிறது.

அது மட்டுமல்லாது வரலாற்றில் தமிழ்நாட்டைத் 'தாய்த்திருநாடுஎன்றும், ‘தமிழ்த்திருநாடு' என்றும் வாய் மகிழக்கூறி மகிழ்ந்தவர் பெரியார் என்பதைப் பேராசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ‘தமிழ்நாடு' என்ற பெயரைத் தமிழ் மக்ககளின் உள்ளங்களில் பதிய வைத்த பெருமை பெரியாருக்குரியதாகும். அறிஞர் அண்ணாதமிழ்நாடு' என்று பெயர் சூட்டியபோது பெரியார் வெளியிட்ட அறிக்கையில் தம்மை முன்னி லைப்படுத்தும் ஒரு சொல்லைக் கூடப் பெரியார் பயன்படுத்தவில்லை. ‘தமிழ்நாடு' என்ற பெயர் வரலாற்றில் தந்தை பெரியாரோடு பின்னிப்பிணைந்து ஒன்று கலந்து நிற்பதைப் பல்வேறு சான்றுகளோடு பேரா. .காளிமுத்து நிறுவியுள்ளார்.

வெள்ளை நிறத்தவர்களால் வஞ்சிக்கப்படும் அமெரிக்கக் கருப்பினத்தவர்

திராவிட இயக்கமும் - கருப்பின உயிர்களும் உயிர்களே இயக்கமும்' என்ற ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் முனைவர் வா.நேரு அவர்கள்  ‘BSNL'  நிறு வனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வர், ‘இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும்என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர். சிறந்த ஆய்வாளர். ‘பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும்', ‘சூரியக் கீற்றுகள்' எனும் இரண்டு கவிதை நூல்களைப் படைத் துள்ளார். ‘திருக்குறள் வலியுறுத்தும் உயிர்ச்சூழலும் இன்றைய உலகச் சூழலும், ‘தமிழ்த் துறவிகளும் வள்ளுவர் கூறும் தவமும், ‘திருக்குறளின் பாயிரம் ஆரிய எதிர்ப்புக்கு முன்னுரை’, ‘ஊழும் கூழும் - பகுத்தறிவுப் பார்வை' முதலான ஆய்வுக் கட்டுரை களை முனைவர் வா.நேரு எழுதியுள்ளார்.

திராவிட இயக்கமும் - கருப்பன உயிர்களும் உயிர்களே'  (Black Lives Master)  என்ற இயக்கமும் மானிட உரிமைகளை மீட்பதற்காகப் போராடும் இயக் கங்கள். அமெரிக்கக் கருப்பின மக்கள் வெள்ளை நிறத்தவர்களால் வஞ்சிக்கப்படும் வரலாற்றைத் திரா விடர்கள் ஆரியர்களால் வஞ்சிக்கப்படும் வரலாற் றோடு ஒப்பு நோக்கி ஆராய்கின்றார் வா.நேரு.

ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய திராவிடர் இயக்கம் செய்த அளப்பரிய சாதனைகளை ஆய்வா ளர் விளக்குகிறார். சமூக ஊடகங்களில்கருப்பின உயிர்களும் உயிர்களே' என்ற இயக்கத்திற்கு ஆதர வாகக் கருப்பினத்தவரும் மனிதநேயமுடைய வெள்ளை நிறத்தவரும் ஒன்று திரண்டனர் எனும் செய்தி, மனிதநேயம் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டஜார்ஜ் பிளாய்ட்' எனும் அமெரிக்க ஆப்பிரிக்கர், ‘என்னால் மூச்சுவிட முடியவில்லைஎன்று உயிர் பிரியும் முன்னர் அவர் உரைத்த இறுதிச் சொற்கள் உலக மக்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தன. தமிழ்நாட்டில் சூத்திரமக்களும், பஞ்சமர்களும் பட்ட துன்பங்களை கருப்பின மக்களின் துயரங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார் முனைவர் நேரு.

நூற்றாண்டுக்கு முந்தைய சைவ சபையில் திராவிடமும் ஆரியமும்' என்ற ஆய்வுக் கட்டுரை யின் ஆசிரியர் பேராசிரியர்  முனைவர் இரா.அற வேந்தன் அவர்கள். புது டில்லியில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரி யர், இதற்கு முன்பு அழகப்பா, பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர் முனைவர் அறவேந்தன். ‘திராவிட மொழி இலக் கணங்களின் வரலாறு', குறுந்தொகை ஆய்வுகளின் வரலாறு' போன்றவற்றை அறவேந்தன் ஆய்வு செய் துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது, தமிழ்நாட்டு அரசின் விருது முதலான விருதுகளைப் பெற்றவர் முனைவர் அறவேந்தன்.

தமிழர் சூத்திரரா?

பெரியாரிய நோக்கில் குறுந்தொகை', ‘பெரியாரிய நோக்கில் மு..’, ‘பெரியார் இலக்கியம்', ‘சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்', ‘தமிழ் - சிங்கள இலக்கண உறவு' போன்ற நூல்களை எழுதி யுள்ள பேராசிரியர் அறவேந்தன் பல்கலைக்கழக மானியக்குழுவிலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வுத் திட்டங்களிலும் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டவர் அறவேந்தன்.

19ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டையில் இருந்தசைவ சபை'யின் திராவிடப் பங்களிப்பைப் பேராசிரியர் அறவேந்தன் ஆய்வு செய்கிறார். பார்ப் பனரல்லாதார் இயக்கம் தோன்றும் முன்னரே சைவ சபையில் பார்ப்பனரல்லாதோர் மட்டுமே உறுப்பினர் களாகச் சேர்க்கப்பட்டனர். திராவிட இயக்கக் கருத்தி யல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவ சபையின் பங்களிப்புஎன்று ஒரு புத்தகமே வெளி வந்திருக்கிறது (2017). இந்த நூலில் உள்ளதமிழர் சூத்திரரா?' என்னும் பதிவைப் பேராசிரியர் அற வேந்தன் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

ஆரியர்கள் மனுநீதியைப் பயன்படுத்தித் திரா விடர்களை இழி பெயரிட்டு அழைத்ததையும் திருக்குறள் மனுவுக்கு எதிரானது என்பதையும் அறவேந்தன் விளக்குகிறார்.

சமயங்களுக்குள்ளேஆரிய - திராவிடப் போர்!

தம் சமய வளர்ச்சிக்கு எதிராக இருந்த கிறித்து வர்களின் ஆய்வு முடிவுகளைக் கூட ஏற்றுக்கொண்ட சைவ சபையினர், தம் சமய வளர்ச்சிக்குத் துணை யாகவே இருந்த ஆரியத்தைத் துணிந்து எதிர்த்தனர், இத்தகைய போக்கினை ஆராய்ந்து அன்றைய சைவ சபை, கிறித்துவம் - சைவம் என்ற கருத்தியலைத் தவிர்த்து ஆரியம் - திராவிடம் என்னும் கருத்தியலை ஆதரித்ததை முனைவர் அறவேந்தன் தெளிவுப் படுத்துகிறார். சமயத்திற்குள்ளேயும் ஆரிய - திரா விடப் போராட்டம் நடைபெற்றுள்ளமையை அற வேந்தன் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறு கற்றுத் துறைபோகிய கழகத் தலைவரின் வாழ்த்துகளையும், கல்வியாளர்கள், ஆய்வுத் துறையில் முதிர்ந்த பேராசிரியர்கள் ஆகியோரின் வாழ்த்துக்களையும் பாயிரமாய்ப் பெற்றுக் கொண்டு, அருமைப் பாடு மிக்க ஆறு ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கித்திராவிடப் பொழில்' தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. திராவிடர் இயக்க வரலாற்றில் இது ஒரு பொன்னாள்! திராவிட ஆய்வைப் புறந்தள்ளி விட்டு இந்தியத் துணைக் கண்டத்தில் அரசியல், சமூகவியல் வரலாற்றை எவரும் எழுத முடியாது. திராவிடப் பொழிலின் நெடும் பயணத்தில் பங்கேற்க வருமாறு இளம் ஆய்வாளர்களைப் பொழில்' அழைக் கிறது. திராவிடவியல் பற்றிய பல்வேறு கருத்துக்களை ஆய்வு செய்ய அறிஞர்களை அழைக்கின்றோம்.

திராவிடப் பொழிலில் ஆயிரம் பூக்கள் மலரட்டும்!“Let Hundreds of Flowers Blossom in Dravida Pozhil!”.

- நிறைவு
Comments