தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக ஜோ பைடனை தோல்வியடைய செய்ய ரஷ்யா தலையீடு

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

வாசிங்டன், மார்ச் 18- அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்த லில் ஜோ பைடனை தோற் கடிக்க ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்தார் என அமெரிக்க அரசின் உளவுத் துறை அறிக் கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பிற்கு உதவுவதற்கும் ஜோ பைடனை தோல்வியடைய செய்யவும்  2020 தேர்தலில் ரஷ்யா தலை யிட்டு உள்ளது என  புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது.மேலும் அது  அமெரிக்க ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்காவிற்கு உள்ளேயே இருப்பதாக கூறுகிறது.

தேசிய புலனாய்வு இயக்கு நர் அவ்ரில் ஹைன்ஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அதிகாரிகள் மற்றும் டிரம் பிற்கு நெருக்கமான மற்றவர் கள் மூலம் பிரசாரத்தில் பைடன் குறித்து தவறான தகவல்களை ரஷ்யா புகுத்த முயன்றது.

பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட் டுக்களை, டிரம்ப் ஆதரவா ளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன் றுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்குரைஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது.

உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக் கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஷ்ய அர சின் உதவியுடன் திட்டமிட் டனர்.

அமெரிக்காவிற்குள் குழப் பத்தையும் முரண்பாடுகளை யும் உருவாக்குவதற்கான ரஷ் யாவின் முயற்சிகள் இது ஆகும்.

ஈரானும் தேர்தலில் தலையிட முயன்றதாக அறிக்கை கண்டறிந்துள்ளது, ஆனால் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் - ரஷ்யா கூட - வாக்கு மொத்தத்தை மாற்றவோ அல்லது தேர்தல் உள்கட்ட மைப்பைத் தாக்கவோ முயல வில்லை என அதில் கூறப் பட்டுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
கோயிலும், 'தினமணி'யும்!
எங்கும் திருக்குறள் - எதிலும் திருக்குறள் - எல்லோருக்கும் குறள் என்பதை வெறும் முழக்கமாக மட்டுமில்லாமல் உலகத்தினுடைய எல்லா பாகங்களிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் கருத்துகள் ஒலிக்கட்டும் - அதன்மூலம் மனித குலம் செழிக்கட்டும்!
Image