ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     உத்தர்காண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவட் பதவி விலகல்.

·     பெரும்பான்மைவாத, ஹிந்துத்துவா அரசியல் தற்போது நடைபெற உள்ள அய்ந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு உதவாது என மூத்த பத்திரிக்கையாளர் பர்சா வெங்கடேஷ்வரராவ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

·     பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் மேற்கொண்டதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     உரிய சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கவில்லை எனக் கூறி விஜயகாந்த் தலைமையிலான தேதிமுக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

·     புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் பாஜக - அதிமுகவிற்கு 14 இடங்கள் ஒதுக்கீடு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய கல்வித் துறைக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. பள்ளிக் கல்வித்துறை ரூ.82,137.16 கோடி ரூபாய் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.43,848.66 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதே போன்று உயர்கல்வித்துறையின் கோரிக்கையில் 63.56 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.38,350.65 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக 174 இடங்களிலும், மதிமுக, கொமுக., உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன..

- குடந்தை கருணா

10.3.2021

Comments