கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாம்

புதுடில்லி, மார்ச் 20 கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்பு களுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என ஏஅய்சிடிஇயின் தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இதுவரை எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி செவிலியர் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப் புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், கலை, அறிவியல் உள் ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக் கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எனவும் புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.

Comments