நூல் அறிமுகம்

நூல்: புனிதம் தேடும் புதினம்

ஆசிரியர்:  கௌதம் நீல்ராஜ்

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

2ஆவது முதன்மை சாலை,

தரமணி, சென்னை 113

பக்கம்: 110

விலை:  ரூபாய் 70/-

திருநங்கைகளின் வாழ்க்கையை புதிய கோணத்தில் தனித்தமிழ் நடையில் படம் பிடிக்கும்  புதினம் இது.

ஒரு சிற்றூரில் ஆணாகப் பிறந்து பதின்ம வயதில் திருநங்கையாக உருமாற்றம் அடைந்து அரசு பணி பெற்று தலைநிமிர்ந்து வாழும் திருநங்கையின் கதை.

சமூக ஆர்வலரும் முற்போக்காளரும் தனித்தமிழ் பற்றாளருமான நூலாசிரியர் கௌதம் நீல்ராஜ் அவர்கள் புதினம் முழுவதும் தனித்தமிழ் நடையில் எழுதி யுள்ளார்.

முது வளநாடு, சில்லைக் காடு, எருவஞ்சேரி என்று ஊரில் பெயர்களும், சிறுநகை, சொற்கோடான்,தளிர்வேணி,பைம்பொழில், குறிஞ்சிக்கோதை, மகுட வேலன், இன்று அனைத்து கதாபாத்திரங்களும் தனித்தமிழ் பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

கௌதம் நீல்ராஜ் அவர்களின் கற்பனையில் உருவான சிற்ரூரை அவரது வர்ணனையுடன் படிக்கும்போதே அப்படி ஒரு இடத்திற்கு சென்று வந்த உணர்வை காட்டு கிறார்.

சிறுநகை என்ற ஒரு திருநங்கை அந்த சிற்றூரில் சொற்கோடன் என்ற பெயருடன்  பிறந்து பருவ மாற்றம் அடைந்து, அதாவது இயல்பான மரபணு மாற்றத்தால் உடல் உள்ளமும் சார்ந்து பெண் உருவை அடை கிறார். அதன் காரணமாக அங்கிருந்து வெளி யேற வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது.

அருகிலுள்ள வேறொரு ஊரில் திருநங்கைகள் குழுவில் இணைகிறார். அவரை தத்தெடுத்துக் கொள்ளும் தாயான மற்றொரு திருநங்கை அவரைப் படிக்க வைத்து அரசுப் பணிக்கு உயர்த்துகிறார். இடையில் திருநங்கைகளின் வாழ்வியல் உறவுமுறையில் மற்றும் அவர்கள் எதிர் நோக்கும் அறைகூவல்கள் ஆகியவற்றை மனித நேயத்துடன் விவரிக் கிறார் நூலாசிரியர்.

பின்னர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான உணர்வான காதல் திருநங்கை களுக்கும் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அழகாக விளக்கு கிறார்.

இறுதியாக ஆணாக பிறந்து தங்களது மகன் எங்கோ ஓடிவிட்டான் என பரித வித்து தேடும் பெற்றோர் இறுதியாக திரு நங்கையான சிறுநகையை கண்டு மகளாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

திருநங்கைகளின் வாழ்வியலையும், வலிகளையும் இதுவரை யாரும் காட்டாத கோணத்தில் காட்டுகிறது இந்த புதினம்

புதுமை இலக்கியத்தை விரும்பும் அனை வரும் படிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

- ழகரன்


Comments