ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல் அய்தராபாத்:

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் அருகே பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், முனையம் அமைக்கப்படாது என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதே முனையம் அமைப்போம் என பாஜக சார்பில் முன்னர் பொன்.ராதாகிருஷணன் கூறியது நினைவு கூரத்தக்கது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

மதத்தின் பெயரால் மக்களிடையே பிளவை ஏற் படுத்தும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருந்து மக்களை நாம் அகற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.

டில்லி அரசின் துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மசோதாவை நிறைவேற்றிட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், மோடி 239 ஏஏ பிரிவைத் தொட முடியவில்லை; எனவே, அவர் தேசிய தலைநகர் பிராந்தியச் சட்டம், 1991அய் திருத்துவதற்கான வழியைத் தேர்ந்தெடுத்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்டது. உண்மையில், மசோதா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதற்கான ஒரு விகாரமான முயற்சி என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் சாடியுள்ளார்.

தி ஹிந்து:

ஹோலி  நாளன்று  விவசாயிகள் மசோதாக்களின் நகல் களை காஜிப்பூரில் எரிப்பார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது. மசோதாக்களின் நகல்களை எரிப்பதன் மூலம் பாரதிய கிஷான் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளை வழிநடத்துவார். காசிப்பூர் எல்லையில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு பி.கே.யு தலைமை தாங்குகிறது.

- குடந்தை கருணா

28.3.2021

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image