தேர்தல் களத்தில்.....

 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

எந்த துணிச்சலில்வாக்குக் கேட்கிறார்கள்?

மேக் இன் இந்தியா தோல்வி, டிஜிடல் இந்தியா தோல்வி, சுமார்ட் சிட்டி தோல்வி, பெண்கள் பாதுகாப்பு தோல்வி, ஸ்டாண்ட் அப் இந்தியா தோல்வி, ஸ்கில் இந்தியா தோல்வி, கருப்புப் பணம் மீட்டு வருவோம் என்ற வாக்குறுதியில் கடும் தோல்வி. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு முற்றிலும் தோல்வி, இப்படி 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் முதல் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் முற்றிலும் தோல்வியில் முடிந்துள்ளன. இதை அவர்களே புள்ளிவிபரங்களோடு மறைமுகமாக ஒப்புகொண்டனர்.

ரூ.40,000 கோடிக்கு மேல் கங்கை தூய்மை என்ற பெயரில் வசூலித்து இன்று வரை கங்கை ஆற்றின் 3 விழுக்காடு கூட தூய்மையாகவில்லை. மாறாக கங்கை மலையை விட்டு கீழிறங்கும் பகுதிகளிலேயே அசுத்தம் அதிகரித்துவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் கூறியுள்ளன. காரணம் கங்கை பாய்ந்துவரும் மலைப்பகுதியில் அதிக அளவு மருந்துநிறுவனங்கள் துவங்கப்பட்டும் அந்த நிறுவனங்களின் கழிவு நீர் விதிமுறைகளை மீறி கங்கை ஆற்றில் கலப்பதால் கங்கை அசுத்தம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

தூய்மை இந்தியா என்ற பெயரில் இன்று வரை பெரும் பணம் வசூலாகிக் கொண்டு - இருக்கிறது, ஆனால் உலகில் அதிகமான மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

அப்படி என்றால் 7 ஆண்டுகளாக இவர்கள் ஆட்சியில் இருந்து என்ன செய்தார்கள்?

இவர்களை இங்கு காலூன்ற விடலாமா? தி.மு.. கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!

திமுக கூட்டணிக்கு

எம்ஜிஆர் கழகம் ஆதரவு

திமுக கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் கழக நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் ஆர்.எம்.வீரப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மொழி, தமிழினத்திற்கு

முழு விரோதி பா...

- .சிதம்பரம் தாக்கு

தமிழகத்தில் 25 ஆண்டு சரித்திர சாதனை திரும்ப இருக்கிறது என்றும், தமிழ்மொழிக்கு, தமிழினத்திற்கு முழு விரோதி பாஜகதான் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து  .சிதம்பரம் பேசுகையில், “நான் பொதுக்கூட்டங்களில் பேசி ஓராண்டு ஆகிவிட்டது இடையிலே கரோனா  நம்மை விலக்கி வைத்து இருந்தது, ஆனால், தேர்தல் ஒற்றுமையாக்கி உள்ளது. தொற்றால் தேர்தல் நின்றுவிடவில்லை தேர்தலை கண்டாவது கரோனா தொற்று போகுமா என்று நான் ஆசைப்படுகிறேன்.

நமது இலட்சியம் ஆட்சி மாற்றம்தான். 1971இல் முதன் முதலில் இந்திரா காந்தி, திமுக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது . 1996இல் காங்கிரஸ் தலைமை கட்சியை ஜெயலலிதாவிடம் அடகுவைத்தது அதை எதிர்த்து திமுக வுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரிய வெற்றி அதே போல 25 ஆண்டுகளுக்கு பிறகு  காங்கிரஸ் கிடைத்த தொகுதியும் 25 அந்த  25 ஆண்டு சரித்திர சாதனையும் திரும்ப இருக்கிறது.

தமிழக முதல்வர் நான்கு ஆண்டு காலம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், கடைசி நேரத்தில் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுவது, மக்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 30 நிமிடம் தாமதமாகி இருந்தால் மளிகை கடன் ரத்து, கைமாத்து கடன் ரத்து என அறிவித்திருப்பார் முதல்வர்.

பேசாத, எழுதாத, ஆட்சி செய்யாத மொழி அழிந்துவிடும். தமிழனின் இனம், குணம் இவற்றின் குறியீடே மொழிதான். தமிழ்மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி மத்திய பாஜகதான், மத்திய அமைச்சரவையில் கேள்வி, பதில் எல்லாம் இந்தியில்தான் பேசுகிறார்கள். இந்தி தெரிந்தால் பேச முடியும் என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள். தமிழ்மீது இந்தி அமரப் போகிறதா? இதற்கு தேர்தல் முடிவுகளின் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள்

இவ்வாறு கூறினார் .சிதம்பரம்.

.தி.மு.. மூலம் தமிழ்நாட்டில்

பா...தான் ஆட்சி நடத்துகிறது

தமிழக மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும்

- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேச்சு

.தி.மு.. மூலம் தமிழ்நாட்டில் பா...தான் ஆட்சி நடத்துகிறது என்றும், தமிழக மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றும் மு..ஸ்டாலின் பேசினார்.

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தி.மு.. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பத்மநாபபுரம்-மனோதங்கராஜ், விளவங்கோடு-விஜயதரணி, கிள்ளியூர்-ராஜேஷ்குமார், குளச்சல்-பிரின்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி-விஜயகுமார் என்ற விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதவாது:-

குமரி மாவட்டத்தில் கலைஞர் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் எத்தனையோ திட்டங்களை - சாதனைகளை படைத்து இருக்கிறார். அவர் செய்திருக்கும் சாதனைகளை உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 10 ஆண்டு காலமாக பாழ்பட்டிருக்கும் ஒரு நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டுவந்து பல கொடுமைகளை - அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சிதான் .தி.மு..வின் ஆட்சி.

நெடுஞ்சாலைத்துறை. அந்த துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இதை ஆதாரத்தோடு நம்முடைய தி.மு.. வழக்குரைஞர் - மாநிலங்களவை உறுப்பினர் - அமைப்புச் செயலாளர் பாரதி கண்டுபிடித்து தி.மு.. சார்பில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. இதை முறையோடு விசாரிக்க வேண்டும் என்றால் சி.பி.அய்.தான் விசாரிக்க வேண்டும். எனவே சி.பி.அய். விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி சந்திக்க வந்தாரா? தைரியம் இருந்தால் நேரடியாக சி.பி.அய். வழக்கை அவர் சந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சந்தித்திருந்தால் அவர் இன்றைக்கு முதல்-அமைச்சராக இல்லை. அவர் சிறையில் தான் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் கோர்ட்டு உத்தரவு போட்ட அடுத்தநாளே உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி விட்டார். அதனால்தான் இன்றைக்கு அவர் வெளியில் இருக்கிறார்.

ஆனால் ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. அவ்வாறு வந்ததற்கு பிறகு அவர் வெளியில் இல்லை. சிறைக்குள் தான் இருக்கப்போகிறார். முதல்-அமைச்சருடைய பினாமிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். 4,000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது. இதை சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. அவ்வாறு எண்ணப்பட்ட மறுநாள் நாம் ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக இவை அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நம்முடைய உரிமைகள் அத்தனையும் பா...விடம் - மோடியிடத்தில் அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.. ஆட்சிக்கு வந்தவுடன், திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா மரணத்தில் உள்ள விவரங்களை கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது நம்முடைய கடமை. ஆனால் அம்மா, அம்மா என்று நடித்துக்கொண்டிருப்பவர்கள் அம்மாவின் லட்சியத்தை காப்பாற்றி விட்டார்களா?.

திடீரென்று சிறுபான்மையினருக்கு வக்காலத்து வாங்கி பேசுவது போல ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு .தி.மு.. உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் பா... உறுப்பினராகத்தான் செயல்படுவார். எனவே .தி.மு.. வெற்றி பெறக்கூடாது. பா...வும் வெற்றி பெறக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் விட மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

இது திராவிட மண் - தந்தை பெரியார் பிறந்த மண் அண்ணா பிறந்த மண் - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண் - நம்முடைய கலைஞர் பிறந்த மண் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது. தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஆட்சியை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஆளவில்லை. டில்லியில் இருப்பவர்கள்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

மோடியும் - அமித்ஷாவும் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை குட்டிச்சுவராக்க நினைத்து கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பல மாநிலங்களில் அதை செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் யாரும் உள்ளே நுழைய முடியாது. இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments