விவசாய தொழில் வளத்திற்கானவாகனங்களின் தேவைகள் அதிகரிப்பு

சென்னை, மார்ச் 7-- இந்திய விவசாயிகள் தங்களது வேளாண் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆர்வம் காட்டி, தங்களது பலதரப்பட்ட பயிர்த் தேவைகள், அவற்றைப் பயிரிடும் முறையில் மாற்றங்களை செய்து தங்களது வேளாண் வருவாயை அதிகரிக்க முயல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு சோனாலிகா (SONALICA)குழுமம் விவசாயிகளின் இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாக்கமான டிராக்டர்களை தயாரித்து வேளாண் பயன்பாட்டிற்கு விற்பனை செய்ததில் விவசாயிகளிடம் அதிக வரவேற்பு பெற்றதால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் 1,06,432 டிராக்டர்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டில் இருந்த நிலையில் இருந்து 35.5 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறோம் என இக்குழுமத்தின் செயல் இயக்குநர் ரமன்மித்தல் தெரிவித்துள்ளார்.

Comments