செய்தியும், சிந்தனையும்....!

கு.மூர்த்தியின் சரணாகதி!

கேள்வி: சோ மீண்டும் உயிருடன் வந்தால்துக்ளக்'கை அவர் கையில் ஒப்படைப்பீர்களா?

பதில்: ‘துக்ளக்'கை அவர் கையில் கொடுத்துவிட்டு, நிற்கமாட்டேன், ஓடியே விடுவேன்.

அந்த அளவுக்குச் சரக்கு இல்லாத ஆசாமியாகவும், எதிர்த்தரப்புகளின் கணைகளை எதிர்கொள்ள முடியாத கோழையாகவும் - குருமூர்த்தி இருக்கிறார் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இது.

உரிமையை விற்காதே!

தேர்தல் - பறக்கும் படையினரால் பணம், தங்கம் பறிமுதல்.

கடந்த தேர்தலில் திருப்பூரில் டாங்கர் நின்றதே - பறக்கும் படை என்ன செய்ததாம்? ஆம்புலன்சில் கூட கடத்தல் நடக்கவில்லையா?

144 தடை போட்டு பணப் பட்டுவாடா நடக்கவில்லையா?

கடைசி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்!

மனிதன் சில நேரங்களில்...

.தி.மு..விடம் பிச்சையெடுத்து வாங்கிய 20 தொகுதிகளில் பா... ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாது : - சு.சாமி.

இந்த மனுஷன் சில நேரங்களில் உண்மையை இப்படிப் போட்டுதான் உடைத்து விடுவார்!

Comments