நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகுமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா மீது தாக்குதல்

கொல்கத்தா, மார்ச் 11- மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட, முதல்வரும் திரிணமூல் காங் கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா நேற்று (10.3.2021) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்27ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக சட்டப் பேர வைத் தேர்தல் நடைபெறுகி றது. இதில் ஆளும் திரிணா மூல்காங்கிரசுக்கும் பாஜகவுக் கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மாநில முதல் வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம் தாவின் நம்பிக்கையைபெற்ற சுவேந்து அதிகாரி, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்தார். நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து போட்டி யிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஹால்டியா வில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அப்போது திரிணாமூல் கட்சித் தலைவர் சுப்ரதா பக் ஷி உடன் இருந் தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல்செய்ய 2 கி.மீ. தூரம் நடந்து சென்றார் மம்தா. அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உடன் சென் றனர். நந்திகிராமில் நேற்று (10.3.2021) மனு தாக்கல் செய்துவிட்டு காரில்ஏற முயன்றபோது நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக் கினர்.

இதுகுறித்து மம்தா கூறும் போது, நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு என்னைத் தள்ளிவிட்டனர். இதில் என் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது என்னைச் சுற்றி காவல்துறையினர் இல்லை. எனது காலில் வீக்கம் ஏற் பட்டுள்ளது. இது ஒரு சதித் திட்டமாகவே இருக்க கூடும் என்றார்.

சில நபர்கள் தள்ளியதால் முதல்வர் மம்தா நடக்க முடியாமல் சிரமப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரி கள் தூக்கி வந்து காரில் உட்கார வைத்த காணொலி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Comments